பக்கம்:எண்ணக்குவியல்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுஎவரையும் வையாதே, வைவது தமிழ் நூல்களில் விலக்கப் பெற்றிருக்கிறது, நல்ல சொற்கள் இருக்கத் தீய சொற்களைக் கையாள்வது பழங்களிருக்கக் காயைக் கடிப்பது போன்றதாகும். முடிவாகக் கூறு மிடத்து வைவது தமிழனின் பண்பே அன்று. வைதிடுவோரையும் வாழ்த்தப் பழகு. வாழ்த்தக் கேட்கின் தாழ்த்திக் கொள்ளு.


வெல்லும் சொல்

'சொல் வெல்லும்' என்றால் எங்களுக்குப் பொருள் விளங்கியிருக்கும் 'வெல்லும் சொல்' என்றால், அது என்ன? என்று அறிய, ஆராயத் தோன்றுமல்லவா?

எழுத்தும் ஒரு கலை; பேச்சும் ஒரு கலை, சிற்பக் கலை போல, ஆம், ஓவியக்கலையும் காவியக்கலையும் ஒன்றை ஒன்று தழுவியவையே.

எழுதுகிறவர்கள் எதையும் எழுதிவிட இயலாது. எழுதவும் கூடாது. எழுதினால், அதை 'எழுத்து' என்று எழுத்தறிஞர்களால் கூறவும் இயலாது. பேசுகிறவர்கள் எதையும் பேசிவிட இயலாது; பேசவும் கூடாது. பேசினால், அதைப் பேச்சு என்று பேச்சுக் கலைஞர்களால் ஏற்கவும் இயலாது.

பதக்கம் கட்டுகின்ற கட்டடக் கலைஞர்களைப் பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் எந்தெந்தவிடத்திற்கு எந்தெந்தக் கற்களை, எப்படிப் பொறுக்கி, எப்படிப் பதிய