பக்கம்:எண்ணக்குவியல்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

எண்ணக் குவியல்

 வைத்து, எதனால் சரிபார்த்து, எவ்வாறு அழகுபடுத்துகிறார்கள் தெரியுமா? அது போலவே, எழுதுகிறவர்களும், பேசுகிறவர்களும், சொற்களை ஆராய்ந்து, தேடிப் பிடித்து நிறுத்தி, எடைபோட்டு, தக்க இடத்தில் அமைக்க வேண்டும். இன்றேல் அது அழகை, சிறப்பை, உயர்வை அடையாது.

நமது திருவள்ளுவர் இருக்கிறாரே!- அல்ல; இருந்தாரே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அவர் சொல்லியிருக்கிறார். "சொல்லுக சொல்லை. ஆனால் அச்சொல் வேறொரு சொல்லால் வெல்லக் கூடாததாக இருக்கவேண்டும்" என்று.

இதனால் பேசுவோரும் எழுதுவோரும் சிறந்த, உயர்ந்த, தீமையற்ற நல்ல சொற்களையே கையாள வேண்டும் என்பது வள்ளுவரின் கருத்து என்பது, நன்கு விளங்குகிறது.

தாயுமானவர் இருந்தாரே-350 ஆண்டுகளுக்கு முன்பு-அவர் உயிர்களின் மீது மிகுந்த இரக்கம் உடையவர். வடமொழியாளர் அவரை ஜீவகாருண்யம் உடையவர் எனக் கூறுவர். 'உயிர்களைக் கொலை செய்யக் கூடாது. கொல்வது நல்லதன்று', என்பது அவரது சிறந்த கொள்கை; இதைக் கூறவந்த அப்பெரியார்,

"கொல்லா விரதம் கொண்டவரே நல்லோர்" எனக் கூறினார்.

அவர் உள்ளம் அதோடு அமைதியடையவில்லை. கொல்லுகிறவர் எத்தகையவர் என்பதைக் கூற வேண்டும் எனவும் அவருள்ளம் துடியாய்த் துடித்தது.

"கொல்லா விரதம் கொண்டவரே நல்லோர். மற்றல்லாதார்...... பராபரமே", எனக் கூறிவிட்டார்; கோடிட்ட இடத்தில் வெல்லும் சொல் பதிக்கப்பட்டிருக்-