பக்கம்:எண்ணக்குவியல்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெல்லும் சொல்

15


கிறது. எங்கே, பார்க்கலாம்? அமையுங்கள். அச்சொல்லை. என்னை அமைக்கச் சொன்னால்.

"கொல்லா விரதம் கொண்டவரே நல்லோர்; மற்ற்ல்லாதார் தீயோர், கொடியோர் பராபரமே” என்றுதான் அமைத்திருப்பேன். அதற்குமேல் செய்ய என்னால் இயலாது.

ஆனால், தாயுமானப் பெருந்தகையார் ஒரு துறவியர் மட்டுமல்லர்; சிறந்த புலவர்; அறிஞர்; ஒழுக்கத்தின் உச்சியிலிருப்பவர். அவர் நினைத்தார் "கொலைஞனாயினும் அவனை வைவானேன்!” என எண்ணினார். 'கடுஞ்சொல்லையும், சுடுசொல்லையும் சொல்வானேன்?' என வருந்திற்றுப்போலும் அவரது உள்ளம்! ஆகவே, அவர் தேடிப் பிடித்துக் கையாண்டு பதிய வைத்த சொல் எது தெரியுமா?

"கொல்லா விரதம் கொண்டவரே நல்லோர், மற்றல்லாதார் யாரோ அறியேன் பராபரமே,” என்பதுதான்.

"யாரோ" என்று கூறியதில், அவர் கடுமையாகக் கூறாமல் பெருமையாகவே கூறினார். இது அவரது பெருந்தன்மையையே காட்டுகிறது என்றுதான் நினைக்கத் தோன்றும். நானும் அப்படித்தான் நினைத்தேன்.

"யாரோ!" என்ற சொல்லில், காகமோ! கழுகோ! பேயோ! பிசாசோ! நாயோ! நரியோ!" என்ற பொருளும் மறைந்து நிற்பதைக் காணலாம்.

"கொடியோன், தீயோன் என்ற சொற்களைச் சொன்னால், அவனை மனிதன் என்று ஒப்புக் கொண்டு விட்டதாகிவிடும் அல்லவா? ஆகவே, அதை அவர் ஒப்ப மறுத்து, அதைவிடக் கடுஞ்சொல்லையே இங்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எண்ணக்குவியல்.pdf/16&oldid=1252984" இலிருந்து மீள்விக்கப்பட்டது