பக்கம்:எண்ணக்குவியல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டே, தமிழ் மொழியைப் பேசிக்கொண்டே, பெற்ற நாட்டையும் வளர்த்த மொழியையும் பிற மக்களுக்கு விலை கூறி அதன்மூலம் வாழ வழிவகுத்து வழிநடை நடக்க எண்ணும் மக்களுக்குக் கவிஞர் பாரதியாரின் சொல்லடி ஒரு நல்லடியாய் அமைந்திருப்பது எண்ணி எண்ணி மகிழக்கூடிய ஒன்று.

நல்ல அடி

விஞர் பாரதியார், பல்வேறு துறைகளுக்குப் பல்வேறு அடிகளைக் கொடுத்திருக்கின்றார். சமூகத் துறைக்கு அவர் கொடுத்த அடிகள் சில, அவற்றுள் ஒன்று கல்லடியினும் சிறந்த சொல்லடியாய்க் காட்சியளிக்கிறது. அது, "கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கை கொட்டிச் சிரியாரோ!" என்பது.

சித்திரக் கலையைப் பாரதியார் பெரிதும் போற்றுகிறார்; மக்கள் அதனை விரும்பிக் கண்டுகளிக்கவேண்டும் என்றும் ஆசைப்படுகிறார்! அது உயர்ந்த விலை மதிப்பு உடையது என்றும் கருதுகிறார். ஆனால், அதற்காகக் கொடுக்கப்படும் விலை கண்ணாக இருக்கக்கூடாது என்று எச்சரிக்கிறார். "கண்ணை இழந்துவிட்டால், சித்திரத்தைக் கண்டு களிப்பது எப்படி?” என்பதே அவரது கேள்வி.

கண்ணை இழந்த ஒருவன், சித்திரங்களை வாங்கி வைத்துத் தடவிப் , பார்த்துக்கொண்டிருப்பது, நகைக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எண்ணக்குவியல்.pdf/20&oldid=1252994" இலிருந்து மீள்விக்கப்பட்டது