பக்கம்:எண்ணக்குவியல்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

எண்ணக் குவியல்


கக் கூடிய நிகழ்ச்சியன்று; மிகவும் இரங்கி வருந்தக்கூடிய நிகழ்ச்சி. பின் நகைப்பிற்குரிய நிகழ்ச்சி யாதெனில், கண் இருக்கிற ஒருவன் கண்ணையே விலையாகக் கொடுத்துச் சித்திரத்தை வாங்கும் நிகழ்ச்சியே என்பது கவிஞரின் கருத்து.

"கண்ணை இழந்து சித்திரம் வாங்குவதா?” என்பது தமிழ் நாட்டுப் பழமொழிகளுள் ஒன்று. அதை அப்படியே கூறக் கவிஞரின் உள்ளம் ஒப்பவில்லை. 'ஒரு கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கும் செயல் ஒருகால் ஒப்பக் கூடியதானாலும் ஆகலாம்' எனக் கருதியே, கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்குவதே நகைக்கக் கூடியது என முடிவுகட்டிக் கூறிவிட்டார்.

உயர்ந்த ஒரு சித்திரத்தைப் பார்த்து மகிழ்ந்து, அதற்குத் தன் சிறந்த உறுப்புகளாகிய கண்களையே விலையாகக் கொடுத்து மகிழும் புரட்சி, கலைஞனது உள்ளத்தில் தோன்றினாலும் தோன்றலாம் என எண்ணியே, கவிஞர் முதலில் கண்களை விற்றுப் பிறகு சித்திரம் வாங்கும் கொடுமைதான் நகைக்கக்கூடியது என இப்பாடலில் குறிப்பிட்டுக் கூறுகிறார்.

கண்களை விற்றுச் சித்திரம் வாங்கும் செயல் எங்கோ, என்றோ நடந்ததாகவோ, நடக்கக்கூடியதாகவோ தெரிய வில்லை. 'பின் ஏன் கவிஞர் இவ்வாறு கூறியிருக்கிறார்?' என எண்ணிப் பார்க்கும் பொழுது இதனை எதற்கோ உவமையாகக் கூறியிருக்க வேண்டும் என்றே நமக்குத் தோன்றுகிறது.

கவிஞர் பாரதியார் அவர்கள் தமிழ் நாட்டை ஒரு 'கண்' ஆகவும். தமிழ் மொழியை ஒரு 'கண்' ஆகவும் கருதி வாழ்த்துவர். இவ்வுண்மையைச் 'செந்தமிழ்