பக்கம்:எண்ணக்குவியல்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நல்ல அடி

21


நாடு' 'தமிழ்த்திருநாடு' என்ற சொற்றொடர்களே மெய்ப்பிக்கும். இச்சொற்றொடர்களிற்கூட மொழியும் நாடும், விழியும் இமையும் போல ஒன்றையொன்று தழுவிக்கொண்டிருப்பது பெரிதும் வியப்பையளிக்கிறது! "எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்பது ஒளவையின் கருத்து. "நாடும் மொழியும் நல்ல கண்கள்" என்பது பாரதியாரின் கருத்து.

'முதன்மந்திரி பதவி, காங்கிரஸ் கமிட்டிப் பதவி சட்டசபை உறுப்பினர் பதவி, அரசாங்க அகராதிக் கமிட்டிப் பதவி, பல்கலைக்கழகப் பேராசிரியர் பதவி மொழி வளர்ச்சிக் கழகத் தலைமைப் பதவி, கலைக் கழகச் செயலாளர் பதவி, இயக்கத் தலைமைப் பதவி உள்ளிட்ட பதவிகளையோ. டாக்டர் பட்டத்தையோ, பாடப்புத்தக அங்கீகரிப்புச் சலுகையையோ, வியாபாரச் சலுகையையோ, பணமுடிப்பையோ, பரிசுத் தொகையையோ, வேறு எதையோ மக்கள் விரும்பிப் பெற்று மகிழ்வதானால் மகிழட்டும்! ஆனால், அதற்காகக் கொடுக்கப்படும் விலை, தமிழையும் தமிழ்நாட்டையும் காட்டிக் கொடுப்பதாக மட்டும் இருக்கக் கூடாது' என்பதே கவிஞரின் கருத்து.

தமிழ் மொழியை அயல்மொழியாளர்க்கும், தமிழ் நாட்டை அயல்நாட்டார்க்கும் அடிமைப்படுத்துவதைக் கண்களை விலைகூறி விற்பதற்கும், அதன் மூலம் பட்டம், பதவி, பணம், சலுகை முதலியவைகளைப் பெறுவதைச் சித்திரம் வாங்கும் செயலுக்கும் கவிஞர் ஒப்பிட்டுக் காட்டியிருப்பது உய்த்துணரத்தக்கது.

கண்கள் இரண்டையும் விற்றுச் சித்திரங்களை வாங்கும் மனிதனும், நாட்டையும் மொழியையும் விற்றுப் பட்டம் பதவிகளைப் பெறும் , மனிதனும் ஒரே இனம்