22
எண்ணக்குவியல்
என்றும், இவர்களது அறிவு ஒரே தன்மையுடையது என்றும், இவர்களது செயல் எப்போதும் நகைக்கத் தகுந்தது என்றும் கவிஞர் இப்பாடலில் நன்கு விளக்கிக் கூறியிருக்கிறார்.
கண்களை இழந்தவன் தான் பெற்ற சித்திரங்களால் எவ்வாறு பயனடைய மாட்டானோ, அவ்வாறே நாட்டையும் மொழியையும் இழந்த எவனும், தான் பெற்ற பட்டம் பதவிகளால் பயனடையமாட்டான் என்பது கவிஞர் கூறாமற் கூறியுள்ள உயர்ந்த கருத்து.
"வாய்மூடி நகைத்தால் என்ன? உதடுகளைப் பிதுக்கி நகைத்தால் என்ன? நான்தான் கண்களை இழந்து விட்டேனே! அது எனக்குத் தெரியவா போகிறது?" என்று எவனாவது ஒருவன் கேட்டு விடுவானாம்! அதற்காகக் கவிஞர், "தம்பீ! உனக்குக் கண் இல்லாவிட்டாலும் காது இருக்கிறது. அது வழியாகவாவது ஒசையைப் புகுத்தி, தாம் பழிப்பதை உனக்கு உணர்த்திவிடுவர்,” என்ற கருத்தை அமைத்தே "கைகொட்டிச் சிரியாரோ!" என்று கூறியிருக்கிறார். இன்றேல் "கண்டவர் சிரியாரோ!" என்று கூறியிருப்பார்.
கண்களைப் பறிகொடுத்துச் சித்திரம் வாங்கும் தவறும், நாட்டை, மொழியைப் பறிகொடுத்துப் பட்டம் பதவி பெறும் தவறும், மன்னிக்க இயலாத தவறுகளாகும். இத்தகைய மலைபோன்ற தவறுகளைச் செய்யும் மக்களை அடித்து உதைத்துத் திருத்த எண்ணாமல், நகைத்துப் பழித்துத் திருத்த எண்ணிக் கூறியிருப்பது கவிஞரின் பண்பட்ட உள்ளத்தையே நமக்குக் காட்டுகிறது. -
தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டே, தமிழ்மொழியைப் பேசிக் கொண்டே, பெற்ற நாட்டையும் வளர்த்த