பக்கம்:எண்ணக்குவியல்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆமை

27

தோன்றின் இருக்க இடமில்லாமையையும் செய்ய வேண்டுவது இன்றியமையாததாகும்.

நாட்டுப் பற்றுள்ள அறிஞர்கள், மக்களைச் சீர்திருத்தப் புறப்படுமுன்னே முதலில் தங்களைச் சீர்திருத்திக் கொண்டு, இவ்வாமைக்குச் சிறிதும் இடங்கொடாமல் இருந்து கொண்டு, பிறருக்கும் இவ்வாமையின் கொடுமைகளை எழுத்தாலும் சொல்லாலும் எடுத்து விளக்கி, மக்களை எச்சரிக்கையோடு வாழச் செய்வதை முதன்மையான தொண்டாகக் கொள்ள வேண்டும்.

இவ்வாமையை நேரடியாக ஒழிக்க இயலாவிட்டால். குறுக்கு வழியாலும் ஒழிக்கலாம், அது வைரத்தை வைரத்தால் அறுப்பது போல, ஆமையை ஆமையால் அழிப்பதாகும், இந்த ஆமைக்குப் பகையாமைகளும் உள்ளன.

அவை :

இம்மையினில் தீமைதனை எண்ணாமை, எக்காலும் பொய்மைதனைச் சொல்லாமை, வஞ்சகத்தாற் பிறர் பொருளைக் கவராமை; வலுவிருந்தும் நெறியுடைமை தவறாமை; கள்ளத்தால் கொடுமையினைச் செய்யாமை; கண்ணற்றோர் உரிமைகளைப் பறியாமை ஆகிய பகை ஆமைகளேயாம்.

இத்தகைய பகை ஆமைகள் இருக்கும் குளத்தை நீங்கள் தேடிச் செல்ல வேண்டா. நானே காட்டிவிடுகிறேன். இவ்வாமைகள் எவரையும் பகையாமை என்ற ஆழமான உள்ளத்திலே தான் வாழும்.

தீண்டாமைப் படுகுழியில் பிறந்து, பொறாமைப் புழுச் சேற்றில் புரண்டு, அநியாயச் செயல்களில் உருண்டு ஆதரவு இல்லாமல் அழிந்த மக்களை அதிகமாகக் கொண்ட நம்