பக்கம்:எண்ணக்குவியல்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

எண்ணக் குவியல்

என்பவைகளாம். இவற்றுள் உயிர்ச் செல்வம் மயில் ஒன்றேயாகும்.

அரண்மனை : மயில் காடுகளில் உள்ள சோலைகளை மட்டும் அழகு செய்வதன்று; நாடுகளில் உள்ள மாளிகைகளையும் அழகு செய்து வருகிறது. தமிழ்நாட்டு மன்னர்களும் பிறநாட்டு மன்னர்களும் மயில்களைத் தங்கள் அரண்மனைகளில் வளர்த்து, அவற்றின் பலவகையான அழகுகளைக் கண்டு களித்திருக்கின்றார்கள்.

உவமை : சங்ககாலத்து நூல்களுள் ஒன்றாகிய பத்துப் பாட்டில் புலவர் நக்கீரர் பாடியுள்ள முதற்பாட்டாகிய திருமுகாற்றுப்படையில் முதலிரண்டு அடிகளில், காலைப் பொழுதில் கடலில் தோன்றுகிற கதிரவனை, பசுமையில் தோன்றுகிற செம்மையை. மயிலில் தோன்றுகிற முருகனாகக் கூறி மகிழ்ந்திருக்கிறார், அவர் கடலையே மயிலாகவும், கதிரவனையே முருகனாகவும் காண்கிறார்.

வணக்கம் : தமிழ் மக்கள் மலைகளில் மயிலைக் காணும் பொழுது, அதன் அழகின் மீது மற்றோர் அழகனையும்-முருகனையும்-சேர்த்துக் கண்டு, வணங்கி வந்திருக்கின்றனர் என்பது தெரிய வருகிறது.

கூந்தல் : பெண்களின் கூந்தலுக்குப் புலவர்கள் மயில் தோகையையே உவமையாகக் கூறி வந்திருக்கின்றார்கள் பெண்களும் மயிலின் தோகையைக் காணும் பொழுதெல்லாம் அதைத் தங்கள் கூந்தலோடு ஒப்பிட்டுப் பார்த்துப் பெருமூச்சு விடுவதும் உண்டு.

காதல் : காதலர்கள், தங்கள் காதலிகளை, 'மானே மயிலே' எனக் கூறுவது ஒரு வழக்கம். இவ்வாறு கூறும் பொழுது பெண் மானையோ, பெண் மயிலையோ,