உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எண்ணக்குவியல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலும் குறளும்

35

எண்ணாமல் ஆண் மானையும், ஆண் மயிலையும் எண்ணியே கூறுகிறார்கள். பெண்ணுக்கு ஆணை உவமையாகக் கூறுகிறோமே என்ற உணச்ச்சியே அவர்களுக்கு இருப்பதில்லை. 'காதல் கொண்ட மக்கள் கருத்தழிவார்கள்.' என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக் காட்டாய் இருக்கிறது.

கண்கள் : மயிலின் கண்கள் கூர்மையான பார்வையுடையவை. அழகான கண்களைப் பெற்றவை மானும் மயிலுமேயாகும். இந்தக் கண்ணழகைக் கட்டழகிகளின் கண்களிற் காணப் புலவர் துடிப்பர்; ஒவியர் துடிதுடிப்பர்; காதலர் கண்டு விட்டதாகக் கூறி நடிப்பர்.

நடை : மயிலின் நடை மிகவும் அமைதியுடையது. அந்த நடையில் மெருமிதமும் கலந்திருக்கும். அதன் எடுப்பான நெஞ்சு. அந்த நடைக்குப் பெரிதும் துணை செய்யும். அதன் நெஞ்சும் நடையும் பெண்களைப் பார்த்துப் பழிப்பனவாய் இருக்கும்.

ஆட்டம் : ஆண் மயில் தனது தோகையை விரித்து அழகாக ஆடும். அதற்கு நிழல் கொடுக்கும் சோலை! ஒத்து ஊதும் தென்றல்! மலர் தெளிக்கும் சாரல்! மிருதங்கம் அடிக்கும் இடி! ஒளிவீசும் மின்னல்! இது கண்கொள்ளாக் காட்சி! இயற்கையோடியைந்த வாழ்வு மயிலுக்கு உண்டு; மக்களுக்கு ஏது? .

வண்ணம் : 'வண்ணாத்திப் பூச்சி’ என இனிச் சொல்லாதீர்கள். பல வண்ணம் உள்ள அந்தப் பூச்சியின் பெயர் 'வண்ணத்துச் பூச்சி' என்பதேயாகும். அப்பூச்சியிலும் காணப்படாத பல வண்ணங்களை மயில் தோகைகளிற் காணலாம். உயிர் வகைகளில் அதிக வண்ணங்கள் உடையதும், அதிக அழகு உள்ளதும் மயில் ஒன்றேயாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எண்ணக்குவியல்.pdf/36&oldid=1254052" இலிருந்து மீள்விக்கப்பட்டது