பக்கம்:எண்ணக்குவியல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருஷ்டி சுற்றுதல்

41

போதும் மக்களுக்குக் கண் எச்சில் (திருஷ்டி) ஏற்படுகிறது என்பதும், அதனால் பலருக்குக் கட்டி, வெக்கை போன்ற பல்வேறு பிணிகள் வருகின்றன என்பதும், அவற்றுக்குத் திருஷ்டி சுற்றுவது என்ற கழிப்புக் கழித்தலே ஏற்ற மருந்தாகும் என்பதும், தமிழ்நாட்டில் தொன்று தொட்டே பலரால் நம்பி வருவனவாகும். இன்றைக்கும் மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இருபதாண்டுகளுக்கு முன்பு என் தமக்கையார் எனக்கும் திருஷ்டி சுற்றினார்; தலையைச்சுற்றி அடுப்பில் போட்ட மிளகாய் சிறிதுகூட நெடிவிசவில்லை என்றும், அவ்வளவு திருஷ்டி எனக்கு இருக்கிறதென்றும் கூறிக் கையை நெரித்தார். அவரது கைநெரிப்பு சடச்சட என்றது. அடுப்பில் போட்ட உப்பும் சடச்சட என்று ஒலித்தது. இவ்வாறு திருஷ்டி சுற்றுதல் ஒருவாறு முடிந்தது.

அன்றிலிருந்து, அடுப்பிற் போட்ட மிளகாய் ஏன் நெடிவிசவில்லை? பலர் காலடிப்பட்ட மண்ணும்; பலர் குடியிருக்கும் வீட்டின் கூரைகளும் அடுப்பில் எரிவதால் மனிதனுக்குப் பார்வைப்பிணி எப்படித் திரும்? உள்ளபடியே பிணி பார்வையினால்தான் உண்டாகிறதா? இவ்வாறு செய்வதால் அது தீர்ந்துவிடுகிறதா என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டுக்கொண்டே இருந்தது.

அடுத்த 30 ஆம் நாள் வெளியூர் சென்றுவந்த என்னை உட்காரவைத்து, என் தமக்கையார் இருப்புப் படி கொண்டு திருஷ்டி சுற்றத் தொடங்கினார். அப்படியே படியை வாங்கிக்கொண்டேன். படியின் உள்ளே 21 மிளகாய், இரு கைம்மண், மூன்று வீட்டுக் கூரை, உப்பு ஆகியவை இருந்தன. இயற்கையாக அடுப்பில் விழுந்த மிளகாய் நெடிவீசும்போது அதைத் தலையைச் சுற்றி அடுப்பில் போட்டால் நெடிவீசாமல் இருக்கிறதே! தலையைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எண்ணக்குவியல்.pdf/42&oldid=1253036" இலிருந்து மீள்விக்கப்பட்டது