பக்கம்:எண்ணக்குவியல்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுவர் மனைவியார் என் வயிற்றிற்கு ஒருவேளை உணவு அளித்தார். அவரோ, என் அறிவுக்குப் பல நாள் உணவையளித்து மறைந்தார். அவர் அளித்த உணவு, "எவரையும் வையாதே, வைவது தமிழனின் பண்பன்று. பிறரை வைவதுதான் முன்னேறும் வழி என்று எண்ணாதே, எவன் முன்னேறினாலும் வைபவன் முன்னேற முடியாது என்பதை நம்பு. தவறு என்று கண்டால் தீமையற்ற சொற்களால் அச்சமற்றுக் கூறு." என்பதுதான்.

நான் கண்ட வ. உ.சி.

திருவாளர் வ. உ. சிதம்பாம் பிள்ளை அவர்கள் தமிழ் நாட்டுத் தேசபக்தர்களுள் ஒருவர். தேசபக்தர் என்றாலே திரு. பிள்ளை அவர்களைத்தான் குறிக்கும். நாட்டின் மீது அவருக்கிருந்த பற்று உள்ளபடியே அளவு கடந்தது எனக் கூறலாம்.

பெரியார் காந்தியடிகளுக்கு முன்பே திரு. பிள்ளை இந்தியாவில் தேசபக்தராய் விளங்கியவர். அவர் உலகமானிய பாலகங்காதர திலகர் அவர்களின் அரசியல் மாணவர் ஆவர். காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் தொண்டு செய்திருந்த காலத்திலேயே திரு.பிள்ளை அவர்கள் இந்தியாவில் தேசத்தொண்டு செய்தவர்கள்.

பிள்ளையவர்கள் பலமுறை சிறை சென்றவர்கள். அவர் செய்த குற்றமெல்லாம். இந்நாட்டின்மீதும்