பக்கம்:எண்ணக்குவியல்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான் கண்ட வ.உ.சி.

47

அரசியல் ஆவேசப் பேச்சுகள் திரு. பிள்ளை அவர்களோடு மறைந்து ஒழிந்தன.

"பிரிட்டிஷ் கப்பல் கம்பெனி"கள் துரத்துக்குடியிலிருந்து கொழும்புக்குச் செல்லும் கட்டணத்தை உயர்த்தித் தமிழ்நாட்டு வணிகத்திற்கே கேடு விளைவித்தன. இதனையறிந்த திரு. பிள்ளை அவர்கள், அவர்களோடு போராடியும், நியாயத்திற்கு இணங்க மறுத்ததனால், அவர்களோடு போட்டியிட்டுத் தாமே ஒரு கப்பலை ஓட்டியும் தமிழ்நாட்டு வணிகத்திற்குத் தொண்டு செய்தார்கள்.

அவர் ஒரு தொழிலாளர் தலைவர்; தொழிலாளர் போக்கைத் தொடர்ந்து போகும் தலைவராயில்லாமல், தொழிலாளரைத் தம் போக்கில் நடத்திச் செல்லும் தலைவராயிருந்தவர்.

அவர் ஒருமுறை சிறை சென்றபோது, தூத்துக்குடி இரயில்வே நிலையமும், சர்க்கார் கட்டடங்களும் தூள் தூளாக்கப்பட்டன, நெருப்புப் பொறிகளும் பறந்தன. அரசாங்கமே நடுங்கி அஞ்சுகின்ற அளவுக்கு அவர் ஓர் வீர மனிதரெனக் கருதப்பட்டார்.

அவருடைய தமிழ்ப்பற்று, தமிழ்நாட்டிலே நன்கு பதிக்கப்பெற்றிருக்கிறது. அதுதான் "திருக்குறள் வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு" என்பது. அது இன்றும் நம்மிடையே இருந்துகொண்டு, அவரையும் அவரது தமிழ்ப் பற்றையும் நினைவூட்டி வருகிறது.

திரு. பிள்ளை சிறையிலிருப்பார். வீட்டிலிருந்து செய்தி வரும். வருகின்ற செய்தி, "குழந்தைகளுக்குத் துணியில்லை, உணவுக்கு வழியில்லை." என்றிருக்கும். கண்கள் கலங்கும்; மனம் கலங்காது. இத்தகைய செய்தி