பக்கம்:எண்ணக்குவியல்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

எண்ணக் குவியல்

கள் பலவற்றை அரசாங்க அதிகாரிகளே அவரிடம் அனுப்பி வைப்பார்கள். காரணம் எந்த வகையிலாயினும் மன்னிப்பைப் பெற்று விடுதலையடைந்து வெளியேற வேண்டுமென்பதுதான். இருமுறை ஆயுட்கால தண்டனை, அந்தமான் தீவுக்கு நாடு கடத்தும் தண்டனையைப் பெற்று, செக்கிழுத்து வாடி வதங்கி அடைத்துப்போன காதுகளுக்கு இச்செய்திகள் எட்டும், அவர் மடிவதில் மனம் கொண்டாரேயன்றி, மன்னிப்பில் மனம் கொள்ளவில்லை.

நாட்டுத் தலைவர் ஒருவரின் மனைவியையும் மக்களையும் காப்பாற்றத் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாமையினால், அவர்கள் விரும்பி உதவி செய்ய வில்லை. அவர் வாழ வகையின்றி வருந்தினார், "இப்படிப்பட்ட மக்களுக்காகச் சிறை புகுந்து, செக்கிழுத்து மடிவதும், நம்மை நம்பியுள்ள மனைவி மக்களை இபபடிப்பட்டவர்களிடம் உயிரோடு ஒப்புவித்து அவர்களையும் மடியச் செய்வதும் நியாயமாகுமா?" என்று சிறையில் பல ஆண்டுகள் எண்ணி எண்ணி நொந்தார். கடைசியாக, ஒரு நாள், கோர்ட்டு அவருக்கு மன்னிப்பு அளித்தது. அவர் மீண்டும் வக்கீல் தொழிலை நடத்தினார். நான் திரு. பிள்ளை அவர்களோடு சேர்ந்து நான்கு கூட்டங்களிற் பேசியிருக்கிறேன். நான் பேசுகின்ற சில ஊர்களுக்கும் அவர்கள் வந்திருக்கிறார்கள். தமிழுக்காக அவர்மீது எனக்கு அளவு கடந்த அன்பு உண்டு. அதற்காக என்மீது அவருக்குப் பற்றுதல் உண்டு. தமிழ் ஒன்றே எங்களைப் பிணைத்து.

அரசியலிலே நாங்கள் மாறுபட்ட கொள்கையுடையவர்கள்; வேறுபட்ட இயக்கங்களைச் சார்ந்தவர்கள். பிள்ளையவர்கள் ஒரு நாள் என்னைத் தட்டப்பாரையில்