பக்கம்:எண்ணக்குவியல்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

எண்ணக் குவியல்

திரு. பிள்ளை அவர்களின் அறிவுரையும் அறஉரையுமாகிய இது எனக்குப் பயன்பட்டது. உங்களுக்கும் பயன்படுமா? முயலுங்கள்.

எனது தலை, சிலருடைய திருவடிகளில் மட்டும் வணங்கியிருக்கிறது. திரு. பிள்ளை அவர்கள் திருவடிகளும் அவற்றுள் சேர்ந்ததுதான். காரணம், பிள்ளையவர்கள் பொய் பேசுவதில்லை என்பதை வாழ்நாள் முழுவதும் ஒரு கொள்கையாகக் கொண்டு உண்மையையே பேசி வந்தார்கள். அதுமட்டுமன்று! உயிர் போகும்வரை ஒழுக்கத்தைக் கையாண்டுவந்த ஒரே தலைவர் அவர் என்பதும் ஆம்!

வாழ்க வ. உ. சி. புகழ்!
வாழ்க அவர் பிறந்த நாடு!