பக்கம்:எண்ணக்குவியல்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

எண்ணக் குவியல்

என்பதும், தென்னை செழித்தால் மன்னன் செழிப்பான்' என்பதும் நம் நாட்டுப் பழமொழி அப்பா நட; இருட்டாகிறது.”

"நிலவளத்தால்தானா தாத்தா, இந்தத் தோப்பு இவ்வளவு அழகாய்த் தோன்றுகிறது?”

"அதனால் மட்டுமன்று; தனித்தனி மரங்களுக்கு இல்லாத ஒர் அழகு, அவை ஒன்றுசேர்ந்து ஒரு தோப்பாய் அமைந்துவிட்டால் அதற்கென்று புதிதாகத் தோன்றிவிடுகிறது. நன்றாய் உற்றுப் பார்!"

"ஆம், தாத்தா! அப்படித்தான் தோன்றுகிறது."

"சேர்ந்து வாழ்கின்ற மக்கள், சேர்ந்து வாழ்கின்ற குடும்பம். சேர்ந்து வாழ்கின்ற சமூகம், சேர்ந்து வாழ்கின்ற மக்களைக்கொண்ட நாடு ஆகிய இவை அனைத்தும் இத்தோப்பைப் போலவே பார்க்கின்ற மக்களின் கண்களுக்குச் செழிப்போடு காணப்படும்."

"ஆம் தாத்தா! உண்மைதான். அந்த மரம் மட்டும் அப்படி வளையாமல் நேராய் நிமிர்ந்து வளர்ந்திருந்தால், இத்தோப்பு இன்னும் அழகாகக் காட்சியளிக்கும்."

"எந்த மரம் அது?"

"அதோ பாருங்கள் தாத்தா! நிலவுக்கு அடியில் வளைவாய்த் தெரிகிறதே, அந்தச் சாய்ந்த தென்னை மரந்தான்."

"ஓ! அதுவா? அதுதான் 'முடத்தெங்கு' என்று கூறுவது!"

"ஓ! அப்படியா 'முடத்தெங்கு, முடத்தெங்கு' எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்; அது இதுதானா? அப்படி என்றால்...?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எண்ணக்குவியல்.pdf/7&oldid=1252940" இலிருந்து மீள்விக்கப்பட்டது