முடத்தெங்கு
7
"முடம் ஆன தென்னை மரம் என்பது பொருள்."
"முடம் என்பதற்கு 'நொண்டி' என்றுதானே பொருள் சொல்வார்கள்?"
"ஆம், கால் வளைவு, கை வளைவு, உடல் வளைவு உள்ளவர் எல்லோரும் முடவரல்லவா?"
"ஆம் தாத்தா! எவ்வளவுதான் அழகும் அறிவும் உள்ளவர்களானாலும், அவர்கள் முடவர்களாய் இருந்தால், பார்க்கும் பொழுதே ஒரு வெறுப்புத் தோன்றிவிடுகிறது."
"அப்பா. அது பெருந்தவறு! முடவர்களைக் கண்டதும், அவர்கள் மீது இரக்கப்படுவதுதான் மக்களின் சிறந்த குணம் ஆகும்."
"இல்லை தாத்தா! நீங்களே பாருங்கள். அந்த ஒரு மரம் வளையாமல் தோப்புடன் சேர்ந்து நிமிர்ந்து நின்றால் இன்னும் எவ்வளவு அழகாக இருக்கும்!"
"இருக்குந்தான்! அதற்கு என்ன செய்யலாம் அதைப் பார்க்கும்போது உனக்கு என்ன தோன்றுகிறது? நன்றாக எண்ணிப்பார்த்துச் சொல்."
"கூட்டுறவிலிருந்து விலகிக் கோணல் வழியில் நடக்கும் மனிதனைத்தான் அந்த முடத்தெங்கு எனக்கு நினைவூட்டுகிறது."
"நன்றாகச் சொன்னாய்! அதுமட்டுமன்று; அந்த ஒன்று விலகிக் கோணல்வழியில் வளர்வதால், அந்தத் தோப்பின் அழகுகூடக் குறைந்து காணப்படுகிறது என்று கூறினாய் அல்லவா?"
"ஆம் தாத்தா! அப்படித்தான் காணப்படுகிறது."
"அப்படித்தான் ஒரு வீட்டிலிருந்து, வீதியிலிருந்து, நாட்டிலிருந்து, நகரிலிருந்து, கூட்டத்திலிருந்து, இயக்கத்தி