பக்கம்:எது வியாபாரம், எவர் வியாபாரி.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

விற்பதும் வியாபாரம். உழவர்களுக்கும், தொழிலாளிகளுக்கும் பொது மக்களுக்கும் ஒரு பாலமாய் அமைவது தான் வியாபாரம். இதைச் செய்யும் வியாபாரிக்கு “ஊதியம்” அடைய உரிமையுண்டு. அது ஒரு அளவுக்குள் இருக்கும்பொழுது “இலாபம்” என்று பெயர் பெறும். அளவுக்கு மீறினால் “கொள்ளை” என்றாகி விடும்.

நாட்டின் உறுப்பு

ஒரு மனிதனின் உடல் உறுப்புக்களும் ஒரு நாட்டின் உறுப்புக்களும் ஒன்றுதான்; வெவ்வேறல்ல. ஒன்றாகவே தோன்றும்.

தலை காடு (Forest)

ஈரும் பேனும் விலங்குகள் (Animals)

நெற்றி சமயம் (Religion)

கண்கள் கல்வி (Education)

மூக்கு நலவாழ்வு (Health)

வாய் பத்திரிகைகள் (Press)

பற்கள் தொழிற்சாலைகள் (Industries)

காதுகள் ஒற்றர்கள் (C.I.D.)

கழுத்து பாதுகாப்பு (Police)

நெஞ்சு அரசாங்கம் (Government)

வயிறு விவசாயம் (Agriculture)

கைகள் தொழிற்சாலை (industries)

கால்கள் போக்குவரத்து (Transport)

முதுகெலும்பு வர்த்தகம் (Commerce)

இதிலிருத்து ஒரு நாட்டின் வர்த்தகம் அந்த நாட்டின் முதுகெலும்பு என்றே தெரிகிறது. ஒரு நாட்டின் வர்த்தகம் பாழ்படுமானால் முதுகெலும்பு இல்லாத மனிதனைப் போன்று அந்ந நாடு காட்சியளிக்கும்.