பக்கம்:எது வியாபாரம், எவர் வியாபாரி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பினாங்கில் வணிகம்

பினாங்கிலிருந்து என்னிடம் வழக்கமாகச் சரக்கு வாங்கும் வியாபாரி ஒருவர் கீழ்க்கண்டவாறு எழுதி யிருந்தார்:

“இந்தக் கப்பலில் அனுப்பிய இரண்டு மூட்டைப்புகையிலை வந்து சேர்ந்தது. இந்த ஆர்டருக்கு இரண்டு முட்டை நல்ல புகையிலையாக அனுப்புங்கள்” என்று இருந்தது.

இக் கடிதத்தைப் படித்ததும் நான் அவருக்கு சரக்கு அனுப்பாமல், “தங்களுக்கு அனுப்பிய சரக்கு மாதிரிதான் என்னிடம் சரக்குகள் இருக்கின்றன. தாங்கள் எழுதியிருந்தபடி அதைவிட நல்ல சரக்குகள் என்னிடம் இல்லை. அதனால் இக்கப்பலுக்கு சரக்கு அனுப்பவில்லை” என்று எழுதிவிட்டேன்.

அடுத்த கப்பலில் அவர் அலறி அடித்துக்கொண்டு, “என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். கணக்கப் பிள்ளை புதிது; அவர் எல்லோருக்கும் எழுதுவதுபோல் கடிதம் எழுதிவிட்டார். நான் அவரைக் கண்டித்துவிட்டேன். இனி, நானே தங்களுக்குக் கடிதம் எழுதுவேன். கப்பல் தோறும் தவறாமல் புன்கயிலையை அனுப்பிக் கொண்டிருங்கள். தாங்கள் அனுப்பிய சரக்கும் நல்ல சரக்குதான்” என்று எழுதியிருந்தார்.

அதிலிருந்து அந்த வியாபாரியிடமிருந்து வரும் கடிதங்களெல்லாம் முதலாளி கையெழுத்தே இருக்கும். எழுத்தும் அளவாக சுருக்கமாக இருக்கும். எப்படி இந்த பினாங்கு வணிகம்?

இதனால், “உயர்ந்த சரக்கு அதிக விலை என்ற கொள்கை எவ்வளவு மதிப்பையும் பெருமையையும் உண்டாக்கியது என்பதை எண்ணிப் பார்ப்பது நல்லது.