பக்கம்:எது வியாபாரம், எவர் வியாபாரி.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.வியாபாரமும் மூலதனமும்

ஒரு தொழிலோ வணிகமோ செய்யத் தொடங்குபவர் நிறைய மூலதனத்தை வைத்துத் தொடங்க வேண்டும்.அவ்வாறு தொடங்குவது அச்சமின்றித் தொழில் செய்யத் துணை புரியும்.

70-ஆண்டுகளுக்கு முன்பு சாயப்பாக்கு மூட்டை ஒன்று 29 ருபாய்க்கு விற்றது. அதில் என் தந்தையார் பாலக்காட்டு சாயப்பாக்கு 10 மூட்டை கொள்முதல் செய்தார். பிறகு மூட்டையின் விலை ரூ 25/-க்கு வந்துவிட்டது. அந்த விலையிலும் என் தந்தை 10 மூட்டை வாங்கினார். மறுபடியும் விலை இறங்கி ரூ. 22/-க்கு விற்றது. அதிலும் 10 மூட்டைகள் வாங்கினார். ரூ. 19|-க்கு விலை வந்தது. அதில் 20 மூட்டைகள் வாங்கினார். அவர் இவ்வளவையும் வாங்கிய பிறகு, சராசரி விலை ரூபாய் 23|-தான் அடங்கியது. பிறகு விலை ஏறியது. அப்போது ரூபாய் 25/-க்கு விற்று எல்லா மூட்டைகளிலும் இலாபம் அடைந்தார். இவை அனைத்தும் மூலதனத்தை அதிகமாக, வைத்து வியாபாரம் செய்ததினால் வந்த விளைவு, இன்றேல் நட்டமடைய நேரிட்டிருக்கும்.