உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




எனது கதைகளின் கதைகள்


நான், கதை எழுத வந்ததே தனிக்கதை. பள்ளிக்கூடக் காலத்திலும், கல்லூரிக் காலத்திலும் “மலர் கவிஞனாக இருந்திருக்கிறேன். அதாவது பள்ளிக்கூட கல்லூரி - கல்வி மலர்களில் கதை, கட்டுரை எழுதியிருக்கிறேன். பேச்சுப் போட்டிகளிலும் முதலாவதாக வந்திருக்கிறேன். கல்லூரி காலத்தில், ஒரு கதை எழுதி ஒருபத்திரிகைக்கு காலையில் அனுப்பினால், அது மறுநாள் காலையில் திரும்பி வந்தது. ஆனால் 1973ம் ஆண்டு இதில் எனக்கு ஒரு திருப்புமுனை. இப்போது புதுதில்லியில் தொலைக்காட்சித் துறையில் செய்தி ஆசிரியராகப் பணிபுரியும் திரு. செல்வராஜுடன் அப்போதைய கதைகளின் தரம் மட்டமாய் இருப்பதாக அடிக்கடி சொல்வேன். (இப்போதோ அந்தக் கதைகள் உயர்தரம்) அவரும் ஒரு நல்ல