பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


8
மீண்டும் கிராமப் பயணம்


ரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில், நான் அதிகமாகக் கதைகள் எழுதவில்லை. அதற்கு முன்பு, எல்லா பத்திரிகைகளிலும், ஏதாவது ஒருவிதத்தில், என் பெயரோ அல்லது கதையோ அல்லது நான் பேசிய உரையின் ஒரு பகுதியோ வெளியாகிக் கொண்டிருக்கும். “சோற்றுப் பட்டாளம்” திரைப்படமாகப் போனபோது, அதற்கு வசனம் எழுதுவதற்காக, எடுத்துக் கொண்ட ஆறுமாத இடைவெளி, ஐந்தாண்டு கால இடைவெளியாகி விட்டது. அவ்வப்போது, நான் இருக்கிறேன் என்பதைக் காட்டிக் கொள்ளவே கதை எழுதும் நிலைக்கு வந்துவிட்டேன். பொதுவாக, பத்திரிகைகளுக்கு நானாக கதை அனுப்புவதில்லை என்றும், கேட்டால் எழுதுவது என்றும், தீர்மானித்தேன். பத்திரிகைகளும் கண்டு கொள்ளவில்லை, நானும் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் பலர் ‘துக்கம்’ விசாரிக்க ஆரம்பித்தார்கள். பிரபல பத்திரிகைகளோ,