பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

105

வண்டிக்” கதைகளுடன் திரும்பினேன். இப்போது மடமடவென்று எழுதிக் கொண்டிருக்கிறேன். கிராமத் தொடர்பு, ஐந்தாண்டுகளாக அற்றுப் போயிருந்ததால் தான், கதை எழுத இயலாதவனாகி விட்டேன் என்ற உணர்வு, எங்கள் ஊருக்குப் போன பிறகுதான் தெரியவந்தது. ஒருவேளை, நான் எனது கதைகளை டெஸ்ட் டியூப் பேபிகளாக, சோதனைக்கூடத்தில் எழுதாமல் இருப்பதை ஒரு வைராக்கியமாக வைத்திருப்பதும், இதற்கு ஒரு காரணமாகும். எனக்குக் கிடைத்த கதைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பீடிகை.

ஊருக்குப் போனபிறகு, அங்கே பீடி சுற்றும் தொழில் பெரிதாக வளர்ந்திருப்பதைப் பார்த்தேன். ஒரு விவசாய சூழல், தொழில் துறைச் சூழலாக மாறும்போது, பண்டைய மரபுகள் அற்றுப்போகும் என்பது, சமூக இயல்.

வீடியோ–ஆடியோ சூழலிலும், பெண்கள் மத்தியில் முற்போக்குச் சிந்தனை வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அங்குள்ள ஒரு இளைஞர் - கண்ணாடிக்காரர் என்று அழைக்கப்படுகிறவர், கம்யூனிஸ்ட் கட்சி இயக்கத்தில் ஈடுபட்டு, இந்தப் பெண்களுக்கு சங்கம் அமைக்கப் பாடுபடுகிறார். அந்தக் கிராமத்தில் கம்யூனிஸ்ட் கட்சி பெயர் அடிபடுவதே, அண்மையில்தான். ஒரு காலத்தில் அதாவது அறுபதுகளில், நான் அந்தக் காலத்து மூக்கு வழிப் பேச்சாளர்களால், தமிழர்கள் முழு மூடர்களாகி விடுவார்கள் என்று சரியாகக் கணித்ததால், அப்போதிருந்த ஒரே ஒரு பழுதுபட்ட–தவிர்க்க முடியாத இயக்கமான காங்கிரஸ்