பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

சு. சமுத்திரம் ☐

கட்சியில் பேச்சாளனாக இருந்தேன். எங்கள் கிராமத்தில் கட்சிக்கொடியை ஏற்றப்போகும்போது, ஒருவர் “அமைதியாக இருக்கும் இந்த ஊரில், அரசியலைப் புகுத்திக் கெடுக்காதே” என்றார். அவர் சொன்னது, சரியாகப்பட்டதால், நானும் ஒதுங்கிக் கொண்டேன். அதற்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரஸ் கட்சியும் கொடிகட்டின. இதுகூடப் பெரிய அளவில் இல்லை. ஆனால் இப்போதோ கம்யூனிஸ்ட் இயக்கம், பெண்கள் மத்தியில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சங்கம் அமைக்க முற்பட்ட கண்ணாடிக்காரன், பீடி முதலாளிகளிடம், தான் சங்கம் வைக்காமல் இருக்க பணம் கேட்டதாக ஒரு புரளியை ஊரில் கிளப்பிவிட்டிருக்கிறார்கள் என்று என்னிடம் முறையிட்டார். நான் “கவலைப்படாதே, உன்னை வைத்தே ஒரு கதை எழுதி ஊக்கப்படுத்துகிறேன்” என்றேன். சொன்னபடி “தோழியரே, தோழியரே” என்ற சிறுகதை தாயில் பிரசுரமாயிற்று. அதற்கு இலக்கியச் சிந்தனை பரிசும் கிடைத்தது.

பூனைக்கும் மணிகட்டலாம்

எங்கள் ஊரில் ஒரு காலத்தில் யார் வேண்டுமானாலும் அடிக்கலாம் என்பது மாதிரி இருந்த ஒரு குடும்பம், இப்போது எழுச்சிபெற்று நிற்கிறது. அந்தக் குடும்பத்தின் இளைஞர்கள் இப்போது எந்த கொம்பனையும் எதிர்ப்பதற்குத் தயாராகிவிட்டார்கள். இதை வைத்து “பூனைக்கும் மணி கட்டலாம்” என்று ஒரு சிறுகதையை “தாய்” பெற்றுக் கொடுத்தாள்.