பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

சு. சமுத்திரம் ☐

பண்டாரக் கூட்டம், மாதவன் கூட்டம், சங்கிக் கூட்டம், குழியன் கூட்டம், இப்படி பலப்பல கூட்டங்கள். இந்தக் கூட்டங்களில் அருகருகே உள்ள இரண்டு கூட்டங்களுக்குத் தீராப்பகை. மாமா மச்சான்களாகப் பழகியவர்கள், தத்தம் குல தெய்வங்களுக்கு ஒரே சமயத்தில் போட்டி போட்டு, கொடை கொடுத்தார்கள். இந்தச் சூழலில், இந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், எதிரிக் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனோடு ஓடி விட்டாள். பெண் பிறந்த குடும்பக் கூட்டத்தினர் இதை ஒரு தலைகுனிவாக நினைத்தார்கள். பையனின் கூட்டமோ, அவர்களை அவமானப்படுத்தி விட்டதுபோல் துள்ளினார்கள். விவகாரம், காவல் துறைக்குச் சென்றது. ஆனால் காவல் துறையின் சப்-இன்ஸ்பெக்டரோ கிராமத்திற்கு வந்து இந்த விவகாரத்தை முழுமையாக விசாரித்து, ஒரு முடிவெடுக்காமல், பையனைப் பெற்ற குடும்பத்தோடு சேர்ந்து, ஏற்கனவே அவமானப்பட்டது போல் துடித்த குடும்பத்தினரை மிரட்டத் துவங்கினார். இதில் எனது உறவினரும் பாதிக்கப்பட்டார். நான் அந்த சப்இன்ஸ்பெக்டருக்கு எனது நண்பரான ஊராட்சி ஒன்றியத் தலைவர் மூலம், நிலைமையை எடுத்துச்சொல்லி, அவர் ஓரம் சாயாமல் பார்த்துக் கொண்டேன். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட அல்லது ஏற்படுத்தப்பட்ட காதல், எப்படி விஸ்வரூபம் எடுத்து, பல தலைகளை விழ வைக்கும் நிலைமைக்குக் கூடப் போகும் என்பதை உணர்ந்தேன். இந்தக் காதலில், அந்தப் பையனோ, அல்லது அந்தப் பெண்ணோ முக்கியத்துவமற்று, சுமார் முந்நூறு பேரின் மானமே நடுத்தெருவுக்கு வந்ததுபோல், ஒரு