பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

சு. சமுத்திரம் ☐

எழுத்தாளர். ஒரு தடவை “நீங்கள் வீணாக குறை சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. ஒரு கதையை எழுதி பிரசுரித்துக் காட்டுங்கள். அதற்குப் பிறகு - பேசுங்கள்” என்றார். எனக்கு சற்று ரோஷம் வந்தது. அன்றிரவே, எழுதத் துவங்கினேன். அந்தக் கதையை, ஆனந்த விகடனுக்கு அனுப்பிவிட்டேன். கதை பிரசுரமாயிற்று. விசாரித்துப் பார்த்ததில், எனக்கு ஏற்கெனவே அறிமுகமாயிருந்த நண்பர் தாமரை மணாளனும், இப்போது மலேசிய தொலைக்காட்சியில் பணியாற்றும் நண்பர் ஜே.எம். சாலியும், இந்தக் கதை பிரசுரமாவதற்கு, பெரிதும் முயற்சி எடுத்தார்கள் என்பது தெரிய வந்தது. இந்தப் பின்னணியில் வாசகர்களிடம் எனது பல்வேறு கதைகளுக்குப் பின்புலனாக இருந்த மெய்யான கதைகளைப் பகிர்ந்து கொள்ளலாமென்று நினைக்கிறேன்.

திரு. செல்வராஜின் “நாக்கைப் பிடுங்குவது மாதிரியான” அறிவுரைக்கு, ஒரு கதையாவது பதிலாக வேண்டும் என்பதுதான் என் எண்ணம். நான், பிரபல எழுத்தாளனாக வேண்டும் என்பதல்ல. முதல் கதை என்பதாலோ என்னவோ, அந்தக் கதை எழுதுவதற்கு முன்னாலும், பின்னாலும் இருந்த என் மனப்போக்கு இப்போதும் நினைவுக்கு வருகிறது.

இப்போது, உருவம், உள்ளடக்கம், உத்தி போன்ற இலக்கிய அனாவசியங்களுக்குள் அவஸ்தைப்பட்டு, ஒரு சிறுகதை எழுத பல நாட்கள் எடுத்துக் கொள்கிறேன். அப்படி இல்லாமல், ஒரே ஒரு மணி நேரத்தில் மடமடவென்று எழுதிவிட்டேன். ஊரில் நடந்த பல நிகழ்ச்சிகளில், ஒரு நிகழ்ச்சியை மனதில்