பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

111

செக்ஸ் ரசனையே மிஞ்சி நிற்கிறது. தார்மீகக் கோபம் ஏற்படுவதில்லை. ஆகையால் பெரும்பாலும் பெண்களின் செக்ஸ் அல்லாத பிரச்னைகளை எழுதுவது என்றே, நான் தீர்மானித்தேன். ஆனால், செக்ஸ் மனோபாவம் பற்றி எழுதியிருக்கிறேன். பொதுவாக எனது கதைகளிலும், நாவல்களிலும், படிக்காத கிராமத்துப் பெண்கள் பண்புள்ளவர்களாகவும், படித்த பெண்கள் ஒரு தினுசாகவும் வந்திருக்கிறார்கள். இந்த அணுகு முறையிலிருந்து இப்போது நான் மாறி இருக்கிறேன். பெண்களை மேன்மைப்படுத்தும் வகையில்தான் எனது பெரும்பாலான கதைகள் வந்துள்ளன.

சோற்றுப் பட்டாளம்

28 ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் குடும்பத்தில் நடந்த நிகழ்ச்சியே சோற்றுப்பட்டாளமாக வடிவெடுத்தது. எனது அம்மாகூடப் பிறந்த சித்தியை, அவரது சொந்த தாய்மாமா மகனுக்கு சென்னையில் கட்டிக்கொடுத்திருந்தது. எனக்கு, சித்தியும் சித்தப்பாவும் எவ்வளவோ செய்திருக்கிறார்கள். சித்தி நாற்பது வயதில் இறந்து போனாள். சித்தப்பாவிற்கு 50 வயது இருக்கும். இன்னொரு கலியாணம் செய்ய ஊருக்குப் போன அவருக்கு, இருபது வயது நிரம்பிய எனது கடைசி சித்தியை கலியாணம் செய்து கொடுக்க ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. சென்னையில் கல்லூரியில் படித்த நான், விஷயத்தைக் கேள்விப்பட்டு, ஒரு கத்தியை எடுத்துக் கொண்டு, அந்தக் கல்யாணத்தைத் தடுப்பதற்காக ஒடினேன். ஆனால் அதற்குள் திருமணம் முடிந்து விட்டது. அந்த ஊரில் அப்போதைய ஒரே படித்த மனிதரான உள்ளுர் ஆசிரியர்தான் இந்த