பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

115

குமுதத்தில் பிரசுரமாயிற்று. இதேபோல் காவல்துறையிடம் கள்ளக்காதலியுடன் பிடிபட்ட கணவன், வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட போது அவன் மனைவி, கணவனைத் துரத்திவிட்டு அவன் காதலிக்குப் பாதுகாப்பு கொடுத்தாள் என்று ஒரு கற்பனைக் கதையையும் எழுதினேன். மானுடத்தின் நாணயங்கள், டி.வி. நாடகமாக ஒளிபரப்பானது. நாடகத்தில் கணவன், மனைவியை காட்டுத்தனமாக அடிப்பதைக் குறைத்திருக்க்லாம் என்று நமது ‘மனிதாபிமானிகள்’ மனம் பொறுக்காமல் கூப்பாடு போட்டார்கள். அடிக்கின்ற காட்சியையே காணக்கூசும் இவர்களால், நிதர்சனத்தை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?

ஆபீஸ் மோகினி

ஒரு பிரச்னையை உள்ளது உள்ளபடி சொல்ல வேண்டும் என்று எண்ணுவதால் படித்த சில பெண்கள் அலுவலகங்களில் மேலிடத்தை கண்வீச்சால் அடித்து சகாக்களை காலால் உதைக்கும் பல சம்பவங்களைக் கண்டிருக்கிறேன். பாதிக்கப்பட்டு இருக்கிறேன். சென்னை வானொலியில் என்னுடைய சகா, ஒரு பெண். போலீசில் ஒருவர், சினிமாவில் ஒருவர், தனது இலாகாவில் ஒருவர், அடியாட்களில் ஒருவர் என்று விதவிதமான மனிதர்களைப் பரிச்சயம் கொண்டவர். புதிதாக வேலைக்கு வந்த, என்னை இவர் படாதபாடு படுத்திவிட்டார். ஒரு பெண்ணின் திருமணத்தையே நிறுத்துவதற்கு முயற்சி செய்தவர். தன்னை வேலையில் சேர்த்த ஒருவரையே தூக்கியெறியும்படி செய்தவர். இவர் பேசினால் அசல் கண்ணகியே மறுபிறவி எடுத்தது போல் தோன்றும். என்னிடத்திலும் இவர்