பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

சு. சமுத்திரம் ☐

வேலையைக் காட்டத் துவங்கினார். ஆனால் நான் விட்டுக் கொடுக்கவில்லை. திருப்பி போராடினேன். இந்த அம்மையாரைப் பற்றி புதுதில்லியில் உள்ள அதிகாரிகளுக்கு புகார் கடிதங்கள் எழுதிப்போட்டேன். விளைவு அவர் மாற்றப்பட்டார். அப்படியும் திருப்தியுறாமல், “அவள் ராட்சஸி” என்ற ஒரு சிறுகதையை குமுதத்தில் எழுதினேன். “ஆபீஸ் மோகினி” என்ற எனது மாத நாவல் இந்த அம்மையாரை மையமாக வைத்து வெளி வந்தது. குமுதத்தில் மாலைமதி வெளியான முதல் ஐந்து மாதங்களில் பிரசுரமான நாவல் இது. இதில் ஒரு வேடிக்கை; இவரது மகளை நல்ல பெண்ணாகவும், யோகத்தில் ஈடுபாடு கொண்டவளாகவும் அம்மாவை எதிர்த்துப் போரிடுபவளாகவும் காட்டினேன். உண்மையிலேயே அந்தப் பெண் இப்போது யோகத்தில் ஈடுபடுபவளாக, அம்மாவின் போக்குப் பிடிக்காமல் அவளிடமிருந்து விடுபட்டு, தனித்து நிற்கும் பண்புள்ள பெண்ணாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஆனால் இப்போது நினைத்துப் பார்க்கும் போது, ஒரு சகாவை இழிவுபடுத்தி இப்படி எழுதியது சரிதானா என்று தோன்றுகிறது. நீலபத்மநாபன் விவகாரத்தில், அவருக்காக நான் இன்னும் அனுதாபம் கொள்கிறேன் என்றாலும், ஒரு அலுவலக சகாவைப் பற்றி அவர் இழிவாக எழுதக் கூடாது என்று எழுத்தாளர் விக்ரமனிடம் வாதித்தேன். உடனே அவர், “நீங்கள் மட்டும் என்னவாம்?” என்று ஆபீஸ் மோகினியைச் சுட்டிக்காட்டினார். அதிலிருந்து அந்த நாவலை எழுதியிருக்க வேண்டாம் என்றே நினைக்கிறேன். இதற்காக அலுவலக சமாச்சாரங்கள் எழுதக் கூடாது என்பதல்ல. ஆனால் அந்தப் பாத்திரம் நமக்குத்