பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எனது கதைகளின் கதைகள்

117

தெரிந்த ஒருவரின் உருவத்தை வர்ணிப்பதாகவோ, முழுக்க முழுக்க அவரைப் பற்றி வருவதாகவோ இருக்கலாகாது என்பது என் கருத்து. எழுத்தில் நிராயுதபாணிகளாக இருக்கும் அவர்களை, நமது எழுத்தாயுதத்தால் தாக்கக் கூடாது என்று இப்போது நினைக்கிறேன். இதே நாவல் ‘பிற்பகல்’ என்ற பெயரில், வானதியால் வெளியிடப்பட்டது.

அம்மாவைத் தேடி.....

பெண்மையை மேன்மைப்படுத்தி நான் எழுதிய ஒரு கதை இன்னும் என் உடம்பை புல்லரிக்க வைக்கிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு “அம்மாவைத் தேடி” என்று ஆனந்தவிகடனில் எழுதிய சிறுகதை. ஒரு நாள் காரிலோ, ஸ்கூட்டரிலோ போய்க் கொண்டு இருக்கும்போது, மரணத்தின் தருவாயில் இருக்கும் ஒருவர், யாரைப்பற்றி சிந்திப்பார் என்ற ஒரு கற்பனை வந்தது. நிச்சயம் அவர் குழந்தையாகி, தனது அம்மாவைப் பற்றியே சிந்திப்பார் என்று தோன்றியது. உடனே ஒரு கற்பனை ஏற்பட்டது. இப்படி எல்லோருமே அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று நினைத்து மரணமடைகிறார்கள். ஆகையால் அனைவருமே ஆவிக் குழந்தைகளாய் ஆகிறார்கள். அம்மாவைத் தேடி ஆகாயத்தில் பறக்கிறார்கள். அங்கே ஆதி பராசக்தியின் முன்னால் லட்சக்கணக்கான குழந்தைகள் நிற்கின்றன. ஒவ்வொரு குழந்தையும் தனது அம்மாவைத் தேடுகிறது; அம்மா இல்லை. இரண்டு குழந்தைகள் பேசிக் கொள்ளும் போதுதான் ஒரு குழந்தைக்கு இன்னொரு குழந்தை அம்மா என்பது தெரிகிறது. ஆனால் அந்த அம்மா குழந்தையும்