பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

சு. சமுத்திரம் ☐

கடைசிக் காலத்தில் தனது அம்மாவைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே இறந்ததால், குழந்தையாகவே வடிவம் பெறுகிறது, எல்லாக் குழந்தைகளும் திகைத்து ஆதிபராசக்தியைப் பார்த்தபோது, அவள், ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் தாய்போல் வடிவம் காட்டுகிறாள். மீண்டும் சுயவடிவுக்கு வருகிறாள். ஆவிக் குழந்தைகளுக்கு இந்த ஆதிபராசக்தி தான் அனைவருக்கும் தாய் என்ற ஒரு எண்ணம் ஏற்படுவதாக சிறுகதையை முடித்தேன். இது இந்து மதக் கதை போல் தோன்றினாலும் அப்போது ஆனந்த விகடனில் உதவி ஆசிரியராக இருந்த முஸ்லிம் நண்பரான எழுத்தாளர் ஜே.எம். சாலி, இந்தக் கதை தான் தனக்குப் பிடித்த கதை என்று அடிக்கடி சொல்லுவார். அனுபவத்தின் அடிப்படையில் எழுதாமல், கற்பனாவாதத்தில் எழுதப்பட்ட கதை இது என்றாலும், இந்தக் கதை பெண்மையின் தாய்மையை மேன்மைப்படுத்தியதுபோல் வேறு எந்தக் கதையும் செய்யவில்லை என்று நினைக்கிறேன். அதாவது எனது கதைகளில்.

தாய்மை

‘தாய்மை’ என்ற தலைப்பில் சென்னை வானொலி நிலையத்தில் அகிலன் அவர்களின் துண்டுதலின் பேரில் ஒரு சிறுகதை படித்தேன். அதுவும் அனுபவக் கதையே, ஒரு தடவை சென்னைக் கடற்கரையில் ஒரு கதைக்கு கரு தேடி அங்குமிங்குமாக சுற்றியபோது, நான்கைந்து வாட்டசாட்டமான ஆசாமிகள் ஒரு இளம் பெண்ணுடன் வந்து என்னைச் சுட்டிக்காட்டி “இவன் தான் உன்னிடம் வாலாட்டியவனா?” என்று கேட்டப