பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

சு. சமுத்திரம் ☐

வீட்டு வேலைக்குப் போய்விட்டு வருகிற எஞ்சிச் சோறை சாப்பிட்டு விட்டு, இவள் சம்பாதிக்கிற பணத்தில் குடிப்பது தான் அவனுடைய ஒரே வேலை. குடிகாரன் சமயத்தில் மிகவும் நல்லவன். ஆனால், தொடர்ச்சியாக அவன் குடித்ததால், அவனின் நல்லவனைக் காண்பது கடினம். இரவில் திடீரென அவன் மனைவி வெளியே அலறி அடித்து அங்குமிங்குமாக ஓடுவாள். இவன் கையில் கம்பை வைத்துக்கொண்டு அவளை விரட்டுவான். “என்னைக் காப்பாத்துங்க காப்பாத்துங்க” என்று அவள் அலறுவாள். பக்கத்தில் உள்ள அனைவரும் பங்களாக்காரர்கள். லைட்டைப் போட்டு வேடிக்கை பார்த்து, அந்தச் சம்பவத்தை லைட்டாகத்தான் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் எனக்கோ மனசு கேட்கவில்லை. பல தடவை நான் வெளியே வந்து, அவனைத் திட்டியிருக்கிறேன். போலீசில் பிடித்துக்கொடுப்பதாக மிரட்டியிருக்கிறேன். அவன் அடங்கிப் போவான். அவள் அழுது தீர்ப்பாள். இப்படிப்பட்ட சூழலில், அந்தக் குடிசைக்குள் வேலை தேடி அவள் தாய்மாமன் வந்தான். அங்கேயே தங்கி ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தான். இவனும் சின்ன வயசுக்காரன். ஒருநாள் வழக்கம் போல், சாராயப் புருஷன் மனைவியை இரவில் துரத்த, இந்தத் தாய்மாமன், அவள் கணவனை புடம்போட்டு விட்டான். நான் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பினேன். ஆனால் அந்த பெண் தாய்மாமன் தூண்டுதலில் கணவன் மீது போலீசில் புகார் கொடுக்க, புகார் கொடுத்த நாள் மாதக்கடைசி என்பதால் போலீசார் புருஷன்காரனை வாரிக்கொண்டு போய் விட்டார்கள். மறுநாள் அந்தப் பெண் என்னிடம்