பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

121

கண்ணீரும் கம்பலையுமாக வந்தாள். கணவனை போலீசில் ஒப்படைத்ததற்காக, அழுது தீர்த்தாள். அவனை எப்படியாவது மீட்டுத் தாங்க சார் என்று என்னிடம் மன்றாடினாள். நானும் என் பதவியைப் பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு டெலிபோன் செய்து, அவனை விடுதலை செய்யும்படி கேட்டுக் கொண்டேன். இந்தப் பெண், கணவனுக்கு மசால் வடைகளையும், பீடிகளையும் வாங்கிக் கொண்டு ஆசையோடு போயிருக்கிறாள். அவளுடைய அன்பைப் புரியாத அந்தப் பயல், போலீசாரிடம் அவள் தாய்மாமனை வைத்துக் கொண்டிருப்பதாகவும், இருவரும் சேர்ந்து, தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் சொல்லியிருக்கிறான். இந்தப் பின்னணியில் அங்கிருந்த போலீசார், கணவனை மீட்கப் போன இந்தப் பெண்ணை, கண்டபடி திட்டியிருக்கிறார்கள். ‘விபச்சாரி’ என்று ஏசியிருக்கிறார்கள். விபச்சாரத்தடை சட்டத்தில் வழக்குப் போடப் போவதாகவும் பயமுறுத்தியிருக்கிறார்கள். பிறகு அவனையும் விடுதலை செய்துவிட்டார்கள். ஆனால் இந்தப் பெண் புருஷனை சேர்க்க மறுத்துவிட்டாள். நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவள் கேட்கவில்லை. தாய்மாமனோடு வாழத் துவங்கினாள். என்னைக் கண்டதும் தலையைக் குனிந்து கொள்வாள். இரண்டு மாதங்களில் தாய்மாமன் நடுரோட்டில் அவளை உதைத்திருக்கிறான். பயங்கரமாக அடித்திருக்கிறான். அக்கம்பக்கம் இருந்த சேரிப்பெண்கள், “புருஷனைத் துரத்திய அவளுக்கு சரிதான்” என்பதுபோல், சும்மா இருந்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியைக் கேள்விப்பட்ட நான், ஒருதடவை அவளை வழியில் பார்க்கும்போது, “தாய்மாமனோடா