பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

சு. சமுத்திரம்

வது ஒழுங்காகக் குடித்தனம் செய்யக் கூடாதா?” என்று கேட்டேன். அதற்கு அவள் எனக்குப் போட்ட பதில் கேள்வி, கிட்டத்தட்ட பகவத் கீதையைப் படித்ததுபோல் இருந்தது.

“ஏன் சாரே, ஒருத்தி ஒரு ஆம்புடையானோட வாழனும்னா, அவன் கொடுக்கிற உதையை வாங்கிட்டுத்தான் இருக்கணுமா? ஒருத்தனோடு அடிபட்டுகிட்டு தான் வாழனும்னா, அது இன்னா கொடும்பம்? இன்னா வாழ்க்கை? அந்தக் கசமாலமும் அடிச்சான் இந்தக் கசமாலமும் அடிச்சான். இனிமேகாட்டி எனக்கு எந்த கசம்மாலமும் வேணாம்.”

இந்தப் பெண் இப்போது எங்கே இருக்கிறாள் என்று தெரியவில்லை. அவள் கேட்ட கேள்வி என்னை இன்னும் உறுத்திக் கொண்டே இருக்கிறது. கணவன்காரன், பிறகு அவளிடம் எவ்வளவோ கெஞ்சியும், அவள் அவனோடு வாழ சம்மதிக்கவில்லை. இதை வைத்து, “பதிலடி” என்று ஒரு சிறுகதையை குங்குமம் பத்திரிகைக்கு அனுப்பினேன். அப்படியே பிரசுரித்தார்கள்.