உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


11
எனது களங்கள்


ஒரு அமாவாசை பெளர்ணமியாகிறது

ஒரு அலுவலகத்தில் அரசுப் பத்திரிகையின் உதவி ஆசிரியராக நான் பணியாற்றினேன். அதன் ஆசிரியர் நோயால் அவதிப்பட்டதால், கிட்டதட்ட நானே அந்தப் பத்திரிகையை நடத்திக் கொண்டு இருந்தேன். இங்கே ஒரு ஏழைப்பெண் கிளார்க்காக இருந்தாள். இவளுக்கு தமிழ் டைப்ரைட்டிங் தெரியும் அப்போதெல்லாம் நான் அதிகமாகச் சிறுகதைகள் எழுதுவதால், அந்தக் கதைகளை அவளிடமே டைப் அடிக்கக் கொடுப்பதுண்டு. கதைகளுக்கு சன்மானம் கிடைத்ததால், அவளுக்கும் ஒரு கதைக்கு பத்து ரூபாய் கொடுப்பேன். சில நாவல்களும் டைப் அடிக்கப்பட்டு, அவளுக்கு நூற்றுக்கணக்கிலும் கொடுத்திருக்கிறேன். இந்த டைப் வேலை பொதுவாக அலுவலகம் முடிந்த பிறகே நடைபெறும். அந்தப் பெண்ணும் அலுவலகப்