பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

சு. சமுத்திரம் ☐

என்று சொல்லப்பட்டது. கேஷ் புக்கைப் பார்த்தால் கட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

அந்தப் பெண்ணை மீண்டும் கூப்பிட்டு விசாரித்தால், அந்த உத்தமியோ, அந்த ஒரே ஒரு தப்பைத் தவிர அடுத்த தப்பைச் செய்யவில்லை என்று சொல்லி விட்டாள். அவளிடம் நடந்ததை எழுதி வாங்கிக் கொண்டு வேறு வழியில்லாமல் நடந்தது அனைத்தையும் தில்லிக்கு எழுதினேன். இதற்குள் பழைய இயக்குனர் போய்விட்டார். புதிய மனிதர் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடுவார் என்று நான் நினைத்தால், ஒருநாள் இன்னொரு அதிகாரி வந்து, நான் இனிமேல் கேஷ் விவகாரங்களைக் கையாளக் கூடாது என்று உத்தரவிட்டுவிட்டுப் போனார். என்னால் பொறுக்க முடியவில்லை. தில்லி மேல் அதிகாரிகளுக்கு கடிதம் மேல் கடிதம் எழுதிப் போட்டேன். அந்தப் பெண் சம்பந்தப்பட்ட கையாடலை விசாரித்து, என் பங்குபணி பற்றியும் கண்டறிந்து, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடுமையாக எழுதிப் போட்டேன். பதில் வரவில்லை. இந்தப் பெண் தில்லிக்குச் சென்று விளையாடி விட்டாள் என்பது பின்னர் தெரிந்தது. நானும் ஒழிந்து போகட்டும் என்று விட்டு விட்டேன்.

ஒருநாள், திடீரென்று, ஒரு சர்தார்ஜி அதிகாரி என்முன் தோன்றினார். அந்தப் பெண் மீது, நான் எழுதிய புகாரை விசாரிக்க வந்ததாகப் பைலைக் காட்டினார். அவர், கேட்ட குறுக்குக் கேள்விகள், நான்தான் அவளை அப்படிக் கையாட வைத்தேன் என்பதுபோல் இருந்தது. நான் பலமாக ஆட்சேபித்