பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

135

தர்மவான் தோற்றாலும் தர்மம் ஜெயிக்கும்

நான் களவிளம்பரத்துறை அதாவது பீல்டு பப்ளிசிட்டி ஆபீசராக இருந்தேன். இது ஒரு வேடிக்கையான டிபார்ட்மென்ட். ஊர்ஊராக திரைப்படம் போடுவது, பப்ளிசிட்டி ஆபீசர் வேலை. அவருக்கு ஒரு ஜீப் உண்டு. ஆனால் இப்படி ஏழெட்டு பப்ளிசிட்டி ஆபீசர்களை மேற்பார்வையிடும் தலைமை அதிகாரிக்கு ஜீப் போகட்டும் - ஒரு சைக்கிள் கூட கிடையாது. ஆனால், இந்த தலைமை அதிகாரி பப்ளிசிட்டி ஆபீசர் ஜீப்பை எடுத்துக் கொண்டு கண்டபடி சுற்றுவார். மாமா வீட்டிற்குப் போவார். மச்சினி சடங்கான விழாவிற்கு குடும்பத்தோடு போவார். தான் மட்டும் போனால் போதாது என்று தன் தம்பியையும் தம்பி மனைவியையும் தனியாக அனுப்பி வைப்பார். இவற்றிற்கெல்லாம் கணக்கு பப்ளிசிட்டி ஆபீசர் எழுதவேண்டும். பொதுவாக இந்த பப்ளிசிட்டி அதிகாரிகள் தலைமை அதிகாரிக்கு ஜீப் பைக் கொடுத்துவிட்ட தைரியத்தில் தங்கள் பங்குக்கும் ஒரு சுற்று சுற்றுவார்கள். இவர்களுக்கு ஒரு சுற்று என்றால், இவர்களது பெண்டாட்டிகளுக்கு ஒன்பது சுற்று. இந்த ஜீப் போகின்ற கிலோமீட்டர்கள் பல கிராமங்களுக்குப் போய் திரைப்படங்கள் காட்டப்பட்டதாக (லாக்புக்கில்) எழுதப்பட்டிருக்கும். சென்னையில் பப்ளிசிட்டி ஆபீசராகச் சேர்ந்த நான், என் குடும்பத்தினரை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஜீப்பில் ஏற்றியதில்லை. இவ்வளவுக்கும் புதுப்பெண்டாட்டி; அரசு வண்டிகளை அத்தை மாமி வேலைக்கு பயன்படுத்துபவர்கள் சமூக விரோதிகள் என்று கருதுபவன் நான். ஆகையால் ஒரு மூடத்தனமான அக்கவுன்