பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

சு. சமுத்திரம் ☐

டன்ட் ரிஜினல் ஆபீசர் மாமியின் பிரிட்ஜை ரிப்பேர் செய்ய ஜீப் வேண்டும் என்று கைப்பட எழுதிக் கொடுத்த போதும், நான் ஜீப்பைக் கொடுக்க மறுத்து விட்டேன். இதனால், தலைமை அதிகாரிக்கும் எனக்கும் வாய்ச்சண்டையும், பேப்பர் சண்டையும் நடைபெற்றது. என்னை அந்தமானுக்கு மாற்றுவது என்று தில்லி முடிவு செய்து விட்டது. நான் நினைத்திருந்தால், அந்த அக்கவுன்டன்ட் கைப்பட எழுதிய கடிதத்தை தில்லிக்கு அனுப்பி அவரையும், அந்த ரிஜினல் ஆபீசரையும் சின்னாபின்னமாக்கியிருக்கலாம். ஆனால் அர்ஜுனனைப் போல் நான் “திவ்ய” அஸ்திரங்களைப் பிரயோகப்படுத்த விரும்பவில்லை. ஆனாலும் போராட்டத்தை விடவில்லை. விளைவு நான் எச்சரிக்கப்பட்டேன். அதேசமயம் நான் எதற்காக சண்டை போட்டேன் என்பதைப் புரிந்து கொண்ட, தில்லி மேலதிகாரிகள், அரசு வண்டிகளைத் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதற்கு, சில கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தார்கள். இந்தப் போரில் நான் தோற்றாலும், நான் சுட்டிக்காட்டிய கொள்கை, கொள்கை அளவிலாவது ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஒரு கூட்டத்தில் திரு மா.பொ.சிவஞானம், தர்மவரன் தோற்றாலும் தர்மம் ஜெயிக்கும் என்று பேசிய பேச்சு, நினைவுக்கு வந்தது. தர்மம் ஜெயிக்கும் என்ற தலைப்பில், குமுதத்தில் ஒரு சிறுகதை வெளியாயிற்று. எமர்ஜென்ஸி சென்சார் இருந்த நேரம். சம்பந்தப்பட்ட சென்சார் அதிகாரி, எனது தலைமை அதிகாரிக்கு விரோதி என்பதால், இந்தக் கதையை பிரசுரிக்க அனுமதித்து விட்டார். ஆனால் இந்த சென்சார் அதிகாரியே, பிறகு எனக்கு தலைமை அதிகாரியாக