பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

137

வந்தார். ராமராவண யுத்தம் முடிந்து, மகாபாரத யுத்தம் துவங்கியது.

இந்த அனுபவங்களை வைத்து, பல கதைகளை எழுதியுள்ளேன்.

ஒரு மணி நேர அறுவை

இப்படி அதிகார வர்க்கத்தோடு நான் அடிக்கடி போராடினாலும், பப்ளிசிட்டி ஆபிசர் என்ற முறையில் எனக்கு அலாதியான அனுபவங்கள் கிடைத்தன. ஒரு தடவை ஒரு ஊரில் மேல்நிலை தண்ணீர் தொட்டியை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அப்போதைய அமைச்சர் காளிமுத்து திறந்து வைக்க வேண்டும். இதற்கு விழா எடுத்தார்கள். இதில் நானும் ஒரு பேச்சாளர். திரு. காளிமுத்துக்கு என் எழுத்து மீது மிகுந்த மரியாதை உண்டு. இதே போல், மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த திரு.யூ.சுப்ரமணியத்திற்கும் என் மீது கொள்ளைப் பிரியம், (ஆனாலும் அவருக்கு அரசு வட்டாரத்தில் ‘மிளகாய்’ என்று பெயர்). நாங்கள் மூவரும் இந்த விழாவிற்குப் போயிருந்த போது பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் என் காதில் கிசுகிசுத்தார். அமைச்சர் திறப்பதாக உள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டி சரியாக இயங்கவில்லை என்றும், இப்போது அதை ரிப்பேர் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும், அதற்கு ஒரு மணி நேரம் ஆகும் என்றும், அதுவரைக்கும் நான் மேடையில் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் கையெடுத்துக் கும்பிட்டார். விழாத் துவங்கியதும், நான் பேசத்துவங்கினேன். குடும்ப நலம், நாட்டு நலம், மொழிநலம் என்ற சம்பந்தா சம்பந்