பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

சு. சமுத்திரம்

தம் இல்லாமல் பேசிக் கொண்டே போனேன். அமைச்சர் கடிகாரத்தைப் பார்த்தார் உடனே அவரைப் பற்றி ஒரு கால் மணி நேரம் துதி பாடினேன். உடனே கலெக்டர் கடிகாரத்தைப் பார்த்தார். இவரைப் பற்றி ஒரு கால் மணி நேரம் துதித்தேன். இப்படி அவரைப் பற்றியும், இவரைப் பற்றியும் மாறிமாறி புகழ்ந்துரைத்து முக்கால் மணி நேரத்தைப் போக்கிவிட்டேன். அதற்கு ஆணையாளரும் தண்ணீர் தொட்டி ரெடியாகிவிட்டது என்று தலையசைத்தார். இதை வைத்து “ஒரு மணி நேர அறுவை” என்ற தலைப்பில் ஆனந்த விகடனில் ஒரு சிறுகதை வெளியாகினது.

கிழவிகளைப் பிடித்து

ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களுக்கு எத்தனையோ வேலைகள்; பல ஆதாயமானவை. ஒரு சில அப்படி அல்ல. குடும்பக் கட்டுப்பாட்டுக்கு ஆள் பிடிக்க வேண்டியதும், முதியவர்களின் கண்பிறை நோயையை குணப்படுத்துவதற்கு முகாம் போடுவதும் அவர்களை முகம் சுழிக்கச் செய்யும் வேலைகள். ஒரு ஊராட்சி ஒன்றியத்தில், இப்படியாக, கண்நோய் சிகிச்சைக்கு பல கிழவர்கள் கிழவிகள் வைக்கப்பட்டிருந்தார்கள். இவர்களுக்கு சுகமாகிறதா என்பது முக்கியம் அல்ல. எத்தனை பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது என்ற புள்ளி விவரமே முக்கியம். அந்தச் சமயத்தின் அந்த ஒன்றியத்திற்கு நான் திரைப்பட பிரிவுடன் காம்ப் போயிருந்ததேன். இந்த முகாமில் ஒரு கிழவி காணாமல் போய் விட்டாள். பலருக்கு அவளை அடையாளம் தெரியவில்லை. ஆகையால் ஆணையாளர் ஜீப்பும், எனது அம்பாசிடர் காரும்