பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

139

பறந்தன. அந்த வட்டாரத்தில் எந்தெந்த கிழவிகள் எல்லாம் தனியாக நடந்து கொண்டிருந்தார்களோ அவர்களையெல்லாம் காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு முகாமிற்கு வந்தோம். அவர்கள் கூப்பாடு போட்டார்கள். நாங்கள் விடவில்லை. புள்ளி விவரம் கூடியது. ஆனால் தப்பித்த கிழவி கிடைக்கவில்லை. இதை வைத்து ஆனந்தவிகடனில் ஒரு சிறுகதை எழுதினேன்.

இல்லந்தோறும் இதயங்கள்

நெருக்கடி காலத்தில் தேனும் பாலும் ஓடியதாக மக்களிடம் சொல்ல வேண்டியது எங்களுடைய பொறுப்பு. தில்லியிலிருந்து ஒரு நாற்பது பேர் கொண்ட நாட்டியக் குழு சென்னைக்கு வந்தது ஒவ்வொரு பெண்ணுக்கும், தான் இந்திராகாந்தி என்ற நினைப்பு. (ஆனால் நான் அறிந்த அளவில் அன்னை இந்திரா எந்தவிதமான பந்தாவும் இல்லாத தலைவர்) இந்தக்குழுவுக்கு, குன்றத்தூர் பக்கம் ஒரு நாட்டிய நிகழ்ச்சி நடத்த ஏற்பாடாகியிருந்தது. எல்லாம் 20 அம்ச திட்டத்தைப் பற்றித்தான். நான் முன்னதாகவே போய் விட்டேன். நாற்பது அடி அகல மேடை போடப்பட்டது. அந்தப் பகுதி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் திரு. அந்தோணி எனது பழைய பஞ்சாயத்து சகா. அவரும் நானும் இந்த தில்லிக் கலைஞர்கள் தங்கியிருந்த இடத்திற்குப் போனோம். அங்கே அவர்கள் பரிதாபமாகப் படுத்துக்கிடந்தார்கள். உடனே நான் அவர்களுக்கு தக்க வசதி செய்து கொடுக்கவில்லை என்ற காரணம் காட்டி, எனது நண்பர் அந்தோணியை சத்தம்போட்டு அதட்டினேன். உடனே