பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

15

பங்காளிகள் காங்கிரஸ்காரர்கள். மாப்பிள்ளை வீட்டுப் பங்காளிகள் தி.மு.க.வினர். வந்ததே வாதம். அந்தக்கால வழக்கப்படி எந்தத் தலைவரை “இல்லற ஒப்பந்த விழாவிற்குத்” தலைமை தாங்க வரவழைப்பது என்பது பிரச்சினையானது. தலைவர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள். இதனால் தொண்டர்கள் கம்புகளைத் தூக்க வேண்டிய கட்டம். இதனால், நம்புங்கள், அந்தத் திருமணமே நின்றுவிட்டது. தலைவர்கள் தங்களது கருத்து வேற்றுமைகளை மறந்து, கல்யாணக் காட்சிகளில் கலந்து கொள்ளும்போது, எங்க ஊர்க்காரன், கல்யாணம் போகட்டும், கருமாதியில் கூட கலந்து கொள்வது இல்லையே என்கிற ஆதங்கம் என் மனதில் இருந்தது. இதற்கு வடிகாலாக “குட்டாம் பட்டியில் கலாட்டா - சென்னையில் கல்யாணம்” என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதினேன். இறுதியில் எந்தத் தலைவர்களுக்காக குட்டாம்பட்டிக் கல்யாணம் நின்றுபோனதோ, அந்த தலைவர்களின் மகனுக்கும், மகளுக்கும் திருமணம் நடப்பதாகவும், இதில் சர்வகட்சித் தலைவர்கள் கலந்து கொண்டதாகவும் கதையை முடித்தேன்.

திரு. செல்வராஜ் நான் கதை எழுத ஒரு தூண்டுகோல் என்றால், இப்பொழுது சென்னை பத்திரிக்கை தகவல் அலுவலகத்தில், தகவல் அதிகாரியாகப் பணிபுரியும் திரு. பாலசுப்பிரமணியம் என் இலக்கியப் பிரவேசம் முதல் கோணல் ஆகாமல் பார்த்துக் கொண்டவர். புதுடில்லியில் என்னுடன் பணியாற்றிய இவர், “வளவள வைக்கப்படப்பு” என்று 20 பக்கங்கள் வரை எழுதிய இந்தக் கதையை பத்து பக்கங்க