பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

141

மான நாட்டியம் நடந்து கொண்டிருந்தபோது உள்ளுர் முனியாண்டி ஹோட்டல் பக்கம் ஒரு சத்தம் கேட்டது.

மதுரை மணிக்குறவன் மாண்ட கதை சொல்லுகிறேன்’ என்று பாட்டு கேட்டது. ஒரு மைக் முன்னால் ஒருவர் மேளம் அடித்துப் பாட, இரண்டு, மூன்று ஆண்களும் பெண்களும் முன்னும் பின்னுமாக ஆடினார்கள். அற்புதமான குரல்; அதிசயமான ஆட்டம். எங்கள் நாட்டியத்தைப் பார்த்த எல்லா மக்களும் மணிக்குறவன் பக்கம் போய்விட்டார்கள். எங்கள் நாற்காலிகள் காலியாகக் கிடந்தன. இறுதியில் கலை நிகழ்ச்சியை மூட்டை கட்டிவிட்டு, நாங்களும் அங்கே போனோம், அப்போது ஒரு பாட்டு “டி.வி.எஸ்.டிரைவர் தன்னை எட்ட நின்னு வெட்டுனானே” என்று கேட்டது. நிகழ்ச்சி முடிந்ததும், இந்தப் பெண்களின் மத்தியில், மணிக்குறவனிடம் ‘ஒரு வீரன், “எதற்காக ஒருவனை எட்ட நின்னுவெட்ட வேண்டும்” என்று கேட்டேன். உடனே அந்த ‘ஆசாமி அறுவா அம்புட்டு நீளமுங்க’ என்றார். நான் இந்தப் பெண்களிடம் ஒரு லெக்சர் அடித்தேன். கலை என்பது அடித்தளத்தில் இருந்து வந்தால்தான், அற்புதமாக வரும் என்று சொன்னேன். அவர்கள் புரிந்து கொண்டார்கள். கர்வபங்கப்பட்டது போல் லேசாக நமுட்டுச் சிரிப்பு சிரித்தார்கள். இதை வைத்தும் ஒரு கதை எழுதினேன் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. இந்த கூத்துக் கலைஞன் மேலே குறிப்பிட்ட நாவலில் ஒரு முக்கிய பாத்திர் ஆனார்.

புதிய திரிபுரங்கள்

அலுவலக சம்பந்தமாக கன்னியாகுமரி மாவட்