பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

சு. சமுத்திரம் ☐

டத்தில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்தேன். அங்கே உள்ளவர்கள், சில எஸ்டேட் முதலாளிகளின் பேச்சும் போக்கும் கிட்டத்தட்ட திரைப்படங்களில் வருவது போலவே இருந்தன. அரசை ஏமாற்றி ஆயிரககணக்கான ஏக்கரை 99 ஆண்டு காலத்திற்கு லீஸ் என்ற பெயரில் வைத்துக் கொண்டு, தொழிலாளர்களை இவர்கள் படுத்தும்பாடு பெரும்பாடு. திரும்பி வரும் போது ஒரு எஸ்டேட்டில் ஒரு மரத்தில் ஒரு தொழிலாளியின் பிணம் தொங்கிக் கொண்டிருந்தது. அக்கம்பக்கம் விசாரித்ததில், அவர் அடித்துக் கொல்லப்பட்டதாக முணுமுணுக்கப்பட்டது. இதற்குள் ஒரு கார் வந்து நின்றது. அதில் ஒரு கான்ஸ்டபிள் கம்பீரமாக வந்து இறங்கினார். கார், எஸ்டேட் முதலாளியுடையது ‘அந்தக் காரில் வந்து இறங்கும் போலீஸ்காரரிடம் எப்படி நியாயத்தை எதிர்பார்க்க முடியும்? அப்படியே அவர் நியாயமாக நடந்து கொண்டாலும் மக்கள் எப்படி நம்புவார்கள்? இதேபோல் தமிழக மின்சார வாரிய காட்டுப்பகுதிகளில் ஒப்பந்தத் தொழிலாளர்கள், கோணிகளையே கதவுகளாகக் கொண்ட குடிசைகளில் சேரும் சக்தியுமான கரைகளில் வாழ்வதைப் பார்த்தேன். இவர்களைப் பற்றி நிரந்தரமான தொழிலாளர்கள் கவலைப்படுவதில்லை. இந்த இரண்டு பின்னணியையும் வைத்து “புதிய திரிபுரங்கள்” என்ற குறநாவலை எழுதினேன். ‘நாகமணி’ என்ற ஒரு அருமையான பத்திரிகை. இதன் ஆசிரியர் திரு.குமாரசுவாமி, பிரபல மருத்துவ நிபுணர். ஓய்வு என்பதே இல்லாதவர். ஆனாலும், சமூக பிரச்சனை காரணமாக நாகமணி என்ற பத்திரிகையைத் துவக்கினார். இந்தப் ‘புதிய திரிபுரங்கள்’ இந்தப் பத்திரிகையில் வந்தது.