பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

சு. சமுத்திரம் ☐

இருந்தாராம். கயிற்றை இழுத்து குடம் பாதி தூரம் வந்துவிட்டது. அந்தச் சமயம் பார்த்து ஒரு கிளார்க் வந்து அந்த ஆட்சித்தலைவர் மாற்றப்பட்டார் என்றும், புது ஆட்சித் தலைவர் பொறுப்பேற்க வந்திருக்கிறார் என்றும் சொன்னாராம். உடனே நமது டவாலி அந்தப் பாத்திரத்தை அப்படியே கிணற்றில் போட்டுவிட்டு புது கலெக்டர் இருக்கும் இடத்திற்கு ஓடினாராம். இப்படி, கலெக்டர்களுக்கே கொத்தடிமை என்று ஆகிப்போனவர்கள், ரயில் நிற்பதை பார்த்துவிட்டு, “கலெக்டர் அம்மா வருகிற ரயிலை ஸ்டேஷன் மாஸ்டர் எப்படி நிறுத்தி வைக்கலாம்?” என்று நினைக்கிறவர்கள். கலெக்டர் அம்மா ரயில்வே மாடிப் படிகளில் ஏறினால் உடம்பு வலிக்கும், என்று எண்ணி, அந்த ரயிலை வேறு பிளாட்பாரத்திற்கு விடக்கூட நினைக்கிறார்கள்” என்று எழுதினேன். இந்த ஒரு வரியில் இவர்கள் கலெக்டர் என்ற மூல ஸ்தானத்தை எப்படி மார்க்கண்டன் மாதிரி பிடித்துக் கொண்டார்கள் என்பதை சித்தரித்தேன்.

நோக்க வேண்டியவை...

இரண்டாவதாக ஒரு கதையை அல்லது அதில் வரும் கேரக்டர்களை எந்த எழுத்தாளனும் கொச்சைப் படுத்தக் கூடாது. முதலில் மனம்போன போக்கில் எழுதலாம். பின்னர் அதை நன்றாகப் படித்து சமூக நோக்கத்தோடு திருத்த வேண்டும். இந்தக் கதையில் டெப்புடி கலெக்டரான இளைஞன் இளவயது கலெக்டர் அம்மாவுக்கு வரவேற்பு மாலையை கழுத்தில் போடுகிறான். இதனைச் சொல்லிவிட்டு அந்த அம்மா “புருஷன் போடுவது மாதிரி மாலையைப் போடு