உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

153

கிறானே” என்று கோபப்படாமல் அந்த மாலைக்காக மனதுக்குள் மகிழ்ந்து வெளியே ஒப்புக்காக மறுத்துப் பேசினாள்” என்று எழுதியிருந்தேன். இப்படி எழுதியதை பிறகு அடித்துவிட்டேன். காரணம் கலெக்டர் என்ற பதவி எப்படி நோக்கப்படுகிறது, அந்த பதவிக்குரியவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை சித்தரிக்கும் நோக்கத்தைக் கொண்டதே தவிர, அந்தப் பதவியில் இருப்பவர்களை மலிவாகக் கொச்சையாக விமர்சனம் செய்ய வேண்டும் என்ற நோக்கமல்ல. ஆகையால்தான் கலெக்டர் அம்மாவைப் பற்றி எந்த இடத்திலும் தரம் குறைத்து நான் விமர்சிக்கவில்லை.

மூன்றாவதாக ரயிலில் தன்னுடன் வந்த ஒரு தொழிலதிபரை கலெக்டர் அம்மா “யு ஆர் அன் இன்டரஸ்டிங் பெர்சானாலிட்டி” வீட்டுக்கோ ஆபீசுக்கோ டெலிபோன் செய்து விட்டு வாருங்கள் என்கிறாள். இதில் ஆபீசுக்கோ என்று போட்டதன் நோக்கம், இந்த இளமங்கை, அந்த தொழிலதிபரை காதல் கண்ணோட்டத்தோடு கூப்பிடவில்லை என்பதைச் சித்தரிக்கவும் பொதுவாக பெரிய அதிகாரிகள் பெரிய முதலாளிகளின் நலன்களையே பேணுவார்கள் என்பதை எடுத்துக்காட்டவும் போடப்பட்ட வார்த்தை. எழுத்தில் வீணான அர்த்தம் வராமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நான்காவதாக அதிகாரவர்க்கம் என்பது ஆட்சித் தலைவரோடு நின்று விடவில்லை என்பதை விளக்கும் வகையில் மாவட்ட அதிகாரிகள் கலெக்டர் தங்களை தப்பாக நினைத்துக் கொண்டாரோ என்று கவலைப்