பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

சு. சமுத்திரம் ☐

முரண்பாடுகளையும் விவரித்து ஒரு சிறுகதை எழுதினேன். குங்குமம் கேட்டதற்கிணங்க, இந்த கதையை அனுப்பி வைத்தேன். பிரசுரமானது என்பதை சொல்லத் தேவையில்லை.

இந்த ஒருமாத இடைவெளி என்னை முழுக்க முழுக்க ஒரு கலைஞனாக்கியது. வானொலியிலும் பின்னர் தொலைக்காட்சியிலும் மாட்டிக் கொண்டு யந்திரமயமான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த எனக்கு, புதுதில்லியில், ஒருமாத காலம், பிரிந்துபோன கலைக்கண்கள் மீண்டும் பொருந்தின. ஒவ்வொரு நிகழ்ச்சியையும், கலாபூர்வமாகப் பார்த்து சமுதாய ரீதியில் சிந்தித்து மனோதத்துவ ரீதியில் எழுத முற்பட்டேன். இந்த ஒருமாத கால அனுபவம் பாலைவன பசுஞ்சோலை போன்றது. சென்னைக்குத் திரும்பியதும், செயற்கை வாழ்வு பிடித்துக் கொண்டது. இதிலிருந்து எப்படியாவது மீள வேண்டும் என்ற ஒரு உத்வேகமும், தொலைக்காட்சியில் செய்திகளைப் போடுவதில் காட்டும் ஆழத்தையும் அறிவையும் இனிமேல் இலக்கியத்தில் காட்ட வேண்டும் என்ற ஒரு எண்ணமும் ஏற்பட்டுள்ளது.

சடையன்

அஸாம் தொலைக்காட்சி அதிகாரி ஒருவர் ஒரு தலைமை அதிகாரியைப் பற்றி சொல்லிச் சொல்லிச் சிரித்தார். அந்தத் தலைமை அதிகாரி அலுவலகக் காரில் போவாராம். காரை ஒருபக்கமாக நிறுத்திக் கொண்டு, டிரைவரை வாழைப்பழம் என்ன விலை என்று கேட்கச் சொல்வாராம். பக்கத்துக் கடையில்