பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


2
சாமியாடிகள்


ங்கள் ஊரில் (திப்பணம்பட்டி) கல்லெல்லாம் சாமி சிலைகள். கட்டிடங்கள் எல்லாம் கோவில்கள். உதிரமாடன் கோவில், சுடலைமாடன் கோயில், கோட்டை மாடன் கோவில், மாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில், ஐவராஜா கோவில், திரெளபதியம்மன் கோவில் என்று சுமார் முப்பது கோவில்கள். உதிரமாடன் கோவிலில், அவரே கதாநாயகன். மாடத்தி, சுடலைமாடன், வீரபுத்திரன், மயானபுத்திரன் ஆகியோர் “எக்ஸ்டிரா” தேவதைகள். இதேபோல், கோட்டை மாடன் கோயிலில், அவர் கதாநாயகன்; உதிரமாடன், சுடலைமாடன் எக்ஸ்டிராக்கள், இப்படி எக்ஸ்டிராக்கள்; கதாநாயகர்களாகவும், கதாநாயகர்கள், நாயகிகள் எக்ஸ்டிராக்களாகவும் உள்ள கோவில்களில் சாமியாட்டம் என்பது இந்தக் காலத்து சினிமா மாதிரி. சாமியாடும் ஒருவரின் பின்னங்கைகளில் கயிறு கட்டப்பட்டிருக்கும். அதே சமயம், அந்தக் கைகளை முன்னால் கொண்டுவரும் அளவிற்கு அந்தக் கயிறு நீக்குப்போக்காக இருக்கும். அவர் முன்னால் ஒரு பனை ஓலையில், முழுக்கோழியை அடித்து