பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

161

கேட்டால் கார் இருப்பதால் விலையைக் கூட்டுவார்கள் என்று, ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் தென்படும் ஒரு கடையை நோக்கி டிரைவரை நடக்கச் சொல்வாராம், அந்த டிரைவரும் ஒரு கிலோ மீட்டர் நடந்து, வாழைப்பழம் விலை கேட்டு மறு கிலோமீட்டர் நடந்து இவரிடம் விலையைச் சொல்லுவாராம். மீண்டும் காசை வாங்கிக்கொண்டு, கடைக்குப் போவாராம். வாழைப்பழத்தோடு திரும்பியவரைப் பார்த்து, “இந்தப் பழம் நல்லா இல்ல. பழத்தைக் கொடுத்து காசு வாங்கிட்டுவா” என்று பழையபடி இரண்டு கிலோமீட்டர் நடக்க வைப்பாராம். இப்படிப்பட்ட பின்னணி யில், ஒரு டிரைவர், அதிகாரி முன்னாலேயே வாழைப்பழத்தை விழுங்கிவிட்டு, தனது சட்டைப்பையிலிருந்து காசை எடுத்துக் கொடுத்தாராம். இதனால் ஆண்டானுக்கும், அடிமைக்கும் பலத்த சண்டையாம். இப்படிப்பட்ட இந்த அதிகாரி அலுவலகத்திலும், ஏடாகோடமாம். இப்படிப்பட்டவர்களை நாம் சென்னையில் சடையன் என்று சொல்வதுண்டு.

இடைவேளை - கதையாகாத நினைவுகள்

புதுதில்லியில் எனது பயிற்சி என்னைப் பொறுத்த படைப்பிலக்கியத்தில், அதற்குரிய சிந்தனைக்கு ஒரு பொற்காலம். ஏகப்பட்ட கதைகள், உவமானங்கள், என்னை அறியாமலே வந்தன. மைனாக்குருவி நடப்பதைப் பார்க்கும்போது, கர்ப்பிணிப்பெண் நடப்பது போல் தோன்றியது. மேக்கப் போட்ட ஒரு ‘அதிகாரி-பாட்டியின்’ இளமைக்காலத்தைக் கிளறியபோது, அவர் தன்னை மறந்து, தனது காதல் திருமணத்தை விளக்கிய விதம், இன்னும் மனதைவிட்டு அகல