பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

சு. சமுத்திரம் ☐

மானத்தின் உந்தலில் அவன் கட்டிக்காத்தான். சில பேர்வழிகள், வகுப்புவாத சாக்கில் என்னைச் சாடினாலும் இதை ஒரு வகுப்புவாத பிரச்னையாக பெரியவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை என்பது மகிழ்ச்சிக்குரியது. எடுத்துக்காட்டாக நான் விருது பெற்ற செய்தியை மிகச்சிறப்பாக வெளியிட்டவர் எனது நண்பரும் தினமலர் ஆசிரியருமான கிருஷ்ணமூர்த்தி. அதை இருட்டடிப்பு செய்தவர் ஒருவேளை எனது தூரத்து உறவினராக இருக்கக் கூடிய ‘மாலைமுரசு’ ஆசிரியர் ராமசந்திர ஆதித்தன். பழைய கசப்பான அனுபவங்களையும் மறந்து எனது பேட்டியை தான் பெற்ற குழந்தைக்குக் கிடைத்த பேறு போல பெருமிதத்துடன் போட்டவர் ‘ஆனந்த விகடன்’ ஆசிரியர் திரு. பாலன். பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் எழுச்சியுற்று வரும் சக்திகளை அடையாளம் காட்டும் இந்த நாவலுக்கான விருதை வெறுப்போடு அணுகியவர்களில் தமிழர் ‘தளபதி’யும் ஒருவர். ஆகையால், இந்த அகாதமிப் பரிசில், வகுப்புவாத முலாம் பூசுவது சந்தர்ப்பவாதிகளுக்கு ஒரு சாக்கு என்பதும் அதே சமயம், அந்த வகுப்புவாதம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது என்பதையும் கண்கூடாகக் கண்டேன்.

வேரில் பழுத்த பலா

‘வேரில் பழுத்த பலா’ என்ற குறுநாவல் வலம்புரி ஜானை ஆசிரியராக கொண்ட ‘மெட்டி’ என்ற மாத நாவல் இதழில் வெளியானது. ஆதி திராவிட இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் முதன்முதலாக மத்திய அரசு அலுவலகத்திற்குள் வேலைக்கு வரும் போது மேல் ஜாதிக்காரர்கள் - குறிப்பாக பிராமணர்கள் அவளை